விமான நிலையத்தில் தடுப்பூசி மையம் திறப்பு

விமான நிலையத்தில் தடுப்பூசி மையம் திறப்பு

1 mins read
122b1a28-17e9-4236-8abb-02c93e5d9131
-

சென்னை: சென்னை விமான நிலை­யத்­தில் பய­ணி­க­ளுக்­காக புதிய தடுப்­பூசி மையம் திறக்­கப் பட்­டுள்­ளது. இதனை விமான நிலைய இயக்­கு­நர் சரத்­கு­மார் திறந்து வைத்­தார்.

சென்னை மீனம்­பாக்­கம் பன்­னாட்டு, உள்­நாட்டு விமான நிலை­யங்­களில் பய­ணி­கள், பொது­மக்­க­ளின் வச­திக்­காக கொரோனா தடுப்­பூசி மையத்தை அமைத்­துள்­ள­னர்.

தமிழக பொது சுகா­தார மையம், சென்னை விமான நிலைய ஆணை­யத்­து­டன் இணைந்து காலை 9 முதல் மாலை 5 மணி வரை செயல்­படும் வகை­யில் இந்த தடுப்­பூசி மையத்தை அமைத்துள்­ளது.

நாடு முழு­வ­தும் கொரோனா, ஓமிக்­ரான் பர­வ­லின் மூன்­றா­வது அலை­யால் நாள்­தோ­றும் ஏரா­ள­மான மக்­கள் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர். இத­னால், தடுப்­பூசி போடும் பணியை மத்­திய, மாநில அர­சு­கள் துரி­தப்­ப­டுத்தி உள்ளன.

சுகா­தா­ரத்­துறை வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், "தமி­ழ­கத்­தில் கடந்த 24 மணி நேரத்­தில் மட்­டும் 17,934 பேர் கிரு­மிப் பாதிப்­புக்கு ஆளா­கி­னர். இவர்­களில் 10,652 பேர் ஆண்­கள், 7,282 பேர் பெண்­கள். சிகிச்சை பெற்று வரு­வோ­ரின் எண்­ணிக்கை 88,959 ஆக அதி­க­ரித்­துள்­ளது. 19 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். கொரோ­னா­வால் இதுவரை மொத்தம் 36,905 பேர் உயிரிழந்துள்ளனர்," எனக் குறிப்­பிட்­டுள்­ளது.