புதுக்கோட்டை: இன்று கொண்டா டும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழகத்தில் இவ்வாண் டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சி கிராமத்தில் நேற்று காலை தொடங்கியது.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர் இந்தப் போட்டியைத் தொடங்கி வைத்தனர்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களைச் சேர்ந்த 700 காளைகளுடன் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு போட்டிையக் களைகட்டச் செய்தனர்.
முதலில் வாடிவாசல் வழியாக கோயில் காளை அவிழ்த்து விடப் பட்டது. அதன்பின்னர், ஒவ்ெவாரு காளையாக களமிறக்கப்பட்டது.
வாடிவாசல் வாயிலாக சீறிப் பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் ஆர்வத்துடன் அடக்கினர்.
திமிலைப் பிடித்து காளைகளை அடக்க முயன்றபோது 15 வீரர் களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறின.
150 பார்வையாளர்களுக்கு மட்டுமே இப்போட்டியைக் காண அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று பகல் 1 மணி வரை மட்டுமே போட்டியை நடத்த வருவாய்த் துறை யினர் அனுமதி அளித்திருந்தனர்.
புதுக்கோட்டை காவல் கண்கா ளிப்பாளர் நிஷா பார்த்திபன் தலை மையில் 150 காவல்துறையினர் பாது காப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சில காளைகள், காளையர்களின் கையில் சிக்காமல் நழுவி ஓடின. சில துள்ளிக்குதித்து மாடுபிடி வீரர்களுக்கு தண்ணீர் காட்டி திணறடித்தன. இதனால், போட்டி யின்போது உற்சாகம் அனல் பறந்தது.
பயங்கரமாக துள்ளிய ஒரு சில மாடுகளை மாடுபிடி வீரர்கள் துணிச்சலோடு அடக்கி மாடுபிடி ரசிகர்களையும் பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
சில காளைகள் வீரர்களுக்கு போக்கு காட்டி, களத்தில் தனது வீரத்தைக் காட்டி, பிடிக்கமுடியாத காளையாக வீர நடைபோட்டுச் சென்றன. சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் வீரர்களால் அடக்கமுடியாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

