சென்னை: தனது பணிகளுக்கு இடையே ஏழை மாணவர்களுக்கு கணிதப் பாடம் சொல்லித் தரும் போக்குவரத்துக் காவலர் மகேந்திரனை மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
கொரோனா தாக்கம் காரண மாக பள்ளிப் பாடங்கள் சரிவர நடத்தப்படாமல் மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை பாரிமுனையில் சாலையோரத்தில் வசித்து வருகிறார் தீபிகா. மாநக ராட்சிப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வரும் தீபிகாவுக்கு சென்னை பூக்கடை காவல் நிலை யப் போக்குவரத்து காவலர் மகேந்திரன் அக்கறையுடன் கணக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் காெணாளி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து, மகேந்திரனின் உதவி மனப்பான்மைக்கு பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலும் மகேந்திரனை பாராட்டி உள்ளார்.

