தொற்று அதிவேகம்; அதை ஒடுக்க அரசு அசுர வேகம்

தொற்று அதிவேகம்; அதை ஒடுக்க அரசு அசுர வேகம்

2 mins read
1d660db9-5828-4877-afb5-d55eb7940dbb
-

சென்னை: தமிழ்­நாட்­டில் உரு­மா­றிய கொரோனா ஓமிக்­ரான் கார­ண­மாக தொற்று அதி­வே­கத்­தில் கூடு­கிறது என்­றும் அதே­வே­ளை­யில், அதை ஒடுக்க அர­சாங்­கம் அசுர வேகத்­தில் செயல்­ப­டு­கிறது என்­றும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

ஓமிக்­ரான் கிருமி கார­ண­மாக தமிழ்­நாட்­டில் மீண்­டும் கிரு­மித்­தொற்று கூடி வரு­கிறது. அதைத் தடுக்­கும் வகை­யில் மாநில நிர்­வா­கம் பல கட்­டுப்­பா­டு­க­ளை­யும் தீவி­ர­மாக எடுத்து வரு­கிறது.

அத­னை­யொட்டி நேற்று முதல் இம்­மா­தம் 18ஆம் தேதி வரை வழி­பாட்டு இடங்­கள் மூடப்­பட்­டன.

ஜன­வரி 16ஆம் தேதி முழு ஊர­டங்கு நடப்­பில் இருக்­கும். பொது போக்­கு­வ­ரத்­தில் முக்­கால்­வாசி அள­வுக்கு மட்­டுமே பய­ணி­கள் பய­ணம் செய்ய முடி­யும்.

கொவிட்-19க்கு எதி­ரான கட்­டுப்­பா­டு­கள் ஜன­வரி 31ஆம் தேதி வரை நடப்­பில் இருக்­கும் என்று அரசு அறி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், வியா­ழக்­கி­ழமை புதி­தாக 20,911 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­தி­யா­ன­தா­க­வும் 25 பேர் மர­ண­ம­டைந்து விட்­ட­தா­க­வும் அதி­கா­ர­பூர்வ தக­வல்­கள் கூறின. ஓமிக்­ரான் தொற்­றி­யோர் எண்­ணிக்கை 241 ஆகி­யது.

மாநி­லத்­தில் இப்­போது 103,610 பேர் சிகிச்சை பெற்று வரு­கி­றார்­கள். சென்ற ஆண்டு ஏப்­ர­லுக்கு பிறகு இப்­போ­து­தான் இந்த எண்­ணிக்கை 100,000ஐ கடந்­துள்­ளது.

கடந்த சில நாள்­க­ளாக தொற்று வேக­மா­கக் கூடி வரு­கிறது என்­றா­லும் ஓமிக்­ரான் தொற்­றைச் சமா­ளிக்க மாநி­லம் முழு­மூச்­சில் ஆயத்­த­மாக இருக்­கிறது என்று முதல்­வர் ஸ்டா­லின் தெரி­வித்து இருக்­கி­றார்.

மாநி­லத்­தில் இப்­போது மக்­கள்­தொ­கை­யில் 64 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு உள்­ள­னர். 15 முதல் 18 வரை உள்ள பதின்ம வய­தி­ன­ரில் 74 விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்டு உள்­ளது.

தடுப்­பூசி இயக்­கத்­திற்­குப் பொது­மக்­கள் அளிக்­கும் ஆத­ரவு மிக­வும் ஊக்­க­மூட்­டு­வ­தாக இருக்­கிறது என்றார் முதல்­வர்.

இந்­நி­லை­யில், பொது இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­யா­த­வர்­களுக்கு விதிக்­கப்­படும் அப­ராத தொகை ரூ.200லிருந்து ரூ.500 ஆக உயர்த்தி தமி­ழக அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

இத­னி­டையே, தமி­ழக முதல்­வர் உள்­ளிட்ட மாநில முதல்­வர்­க­ளு­டன் காணொளி மூலம் பேச்சு நடத்­திய பிர­த­மர் நரேந்­திர மோடி, கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­க­ளை­யும் கூடு­தல் தடுப்­பூசி இயக்­கத்­தை­யும் தீவி­ரப்­ப­டுத்­தும்­படி மாநி­லங்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.