முதல்வர்: சமூக நீதி­யு­டன் கூடிய பொரு­ளி­யல் வளர்ச்­சியே இலக்கு

முதல்வர்: சமூக நீதி­யு­டன் கூடிய பொரு­ளி­யல் வளர்ச்­சியே இலக்கு

2 mins read
8d78a261-7469-4898-b048-3d6799303d1e
-

சென்னை: தமி­ழக முதல்­வர் மு க ஸ்டா­லின் கடந்த எட்டு மாத காலத்தில் தனது ஆட்சி எப்­படி செயல்­பட்டு இருக்­கிறது என்­பது பற்றி வியா­ழக்­கி­ழமை பல விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார்.

தன் மேசைக்கு வந்த கோப்­பு­களில் 97%க்குத் தான் தீர்வு கண்டு­விட்­ட­தாகவும் மக்­களுக்கு அளித்த அனைத்து உறுதி­மொ­ழி­களை­யும் தனது அரசு நிறை­வேற்றி வரு­வ­தாகவும் அவர் தெரி­வித்­தார்.

எல்லா அமைச்­சர்­களும் இதே­போ­லவே நடந்­து­கொள்ள வேண்­டும் என்று தான் கேட்­டுக்­கொண்டு இருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

மக்­களை நேர­டி­யாக சந்­தித்து அவர்­க­ளின் உணர்­வு­க­ளைத் தான் தெரிந்­து­கொண்டு வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட முதல்­வர், 2021-2022 ஆம் ஆண்­டுக்­கான திருத்­தப்­பட்ட வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் 1,641 அறி­விப்­பு­கள் உள்ளன என்றார்.

அவற்­றில் பல­வும் நிறை­வேற்­றப்­பட்டு இருப்­ப­தா­க­வும் எஞ்­சி­யவை நிறை­வேற்­றப்­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இத­னி­டையே, தமிழ்­நாட்­டில் சமூக நீதி­யு­டன் கூடிய பொரு­ளி­யல் வளர்ச்­சியை சாதிப்­பதே குறிக்­கோள் என்று முதல்­வர் தெரி­வித்து உள்­ளார். முதல்­வ­ரா­கப் பதவி ஏற்று எட்டு மாதங்­கள் ஓடி­விட்ட நிலை­யில், திரு ஸ்டா­லின் 'தி இந்து' செய்­தித்­தா­ளுக்கு ஒரு பேட்டி அளித்­தார்.

அதில் தனது அர­சின் முன்­னு­ரி­மை­க­ளை அவர் பட்­டி­ய­லிட்­டார்.

தமிழ்­நாட்­டிற்குப் பெரும் பெரும் நிறு­வ­னங்­க­ளைக் கவர்ந்து முத­லீடு செய்­யும்­படி செய்­வ­தும் கொவிட்-19 தொற்றைத் துடைத்­தொ­ழிப்­ப­தும் அவற்றில் அடங்­கும் என்றார் அவர்.

அனைத்து தரப்­பி­ன­ரை­யும் உள்­ள­டக்­கிய பொரு­ளி­யல் மேம்­பாட்­டைச் சாதிக்­கவே தான் முயல்­வதாக ஸ்டா­லின் குறிப்­பிட்டு உள்­ளார். இதை 'திரா­விட முன்­மா­திரி' என்று அவர் வர்­ணித்­தார்.

தமிழ்­நாட்­டிற்கு 10 ஆண்டு இலக்கு என்ற ஒரு கோட்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் தான் திட்­டங்­களை வகுத்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட ஸ்டா­லின், கடந்த 10 ஆண்­டு­களில் பின்­தங்­கி­விட்ட மாநி­லத்தை மீண்டும் முன்­னேற்­று­வதே முக்­கிய பணி என்­றார்.

பொரு­ளி­யல், விவ­சா­யம், நீர்­வளம், கல்வி, சுகா­தா­ரம், நகர மேம்­பாடு, கிரா­மிய உள்­கட்­ட­மைப்பு வச­தி­கள், சமூக நீதி ஆகி­ய­வற்­றில் தாங்­கள் ஒரு­மித்த கவ­னம் செலுத்தி வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட திரு ஸ்டா­லின், இதைச் சாதிக்­கும் வகை­யில் மேலும் ஐந்­தாண்டு காலம் மாநி­லத்­தில் ஆட்­சி­பு­ரிய மக்­கள் அனு­மதி தருவர் என்று நம்­பிக்கை தெரி­வித்­தார்.

தமிழ்­நாட்டை டிரில்­லி­யன் டாலர் பொரு­ளி­ய­லாக ஆக்க வேண்­டும் என்று தமது அரசு இலக்கு நிர்­ண­யித்து இருக்­கிறது என்­றும் அதைச் சாதிக்க விவே­க­மாக தமது அரசு செயல்­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் மேலும் குறிப்பிட்டார்.