தென் மாவட்டங்களில் நச்சுக் காய்ச்சல்; புது மிரட்டல், அவதி

தென் மாவட்டங்களில் நச்சுக் காய்ச்சல்; புது மிரட்டல், அவதி

1 mins read
05889024-2738-471d-9546-2bc2394cf254
-

திரு­நெல்­வேலி: திரு­நெல்­வேலி, தென்­காசி, தூத்­துக்­குடி, கன்­னி­யா­கு­மரி மாவட்­டங்­களில் கொவிட்-19 பர­வல் ஒரு­பு­றம் இருக்க, கடந்த சில வாரங்­க­ளா­கவே பல­ருக்கு நச்சுக் காய்ச்­சல் ஏற்பட்டுள்ளது.

அரசு, தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் காய்ச்­ச­லுக்குச் சிகிச்சை பெறு­வோர் கூட்­டம் அதிகம் உள்­ளதா­கத் தக­வல்­கள் கூறின.

புது­வி­த­மான இந்தக் காய்ச்­சல் கண்டவர்­க­ளுக்­குத் தொண்­டை­யில் வலி, மூக்கு ஒழு­கு­தல், வாந்தி, அதிக மூட்டு வலி ஏற்­படு­கிறது.

காய்ச்­சல்­ தொற்று நோய்ப் போல் பர­வு­கிறது என்­ப­தால் உடலில் எதிர்ப்பு சக்­தியை அதி­கரிக்­கும் உணவு வகை­களை இந்த நேரத்­தில் எடுத்­துக்­கொள்ள வேண்­டும் என்று மருத்­து­வர்­கள் கூறி­னர்.

முகக்­க­வ­சம் அணி­தல், அரசு வழி­காட்­டு­தல்­க­ளைக் கடை­ப்பி­டித்­தால் பாதிப்­பி­லி­ருந்து தப்­ப­லாம் என அவர்கள் தெரிவித்தனர்.