மதுரை: மதுரை மாவட்டம், பாலமேட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் இரண்டு, மூன்றாம் நிலைகளில் இரு இளையர்கள் காளைகளை அடக்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்கள் ஆள் மாறாட்டம் செய்து, முறைகேடாக விளையாடுவது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் வருவாய்த் துறை அதிகாரிகள் போட்டியில் இருந்து வெளியேற்றி, காவல்துறையினரிடம் ஒப்படைத்த னர். விசாரணையில் இளையர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர்.
ராமச்சந்திரன் என்ற இளைஞர், 17 என்ற எண் கொண்ட கார்த்தி என்பவரின் சீருடையை அணிந்து எட்டு காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தில் இருந்ததும் தமிழரசன் என்ற இளைஞர், சக்கரவர்த்தி என்பவருக்குப் பதிலாக போட்டியில் பங்கேற்று ஆறு காளைகளை அடக்கி, மூன்றாவது இடத்தில் இருந்ததும் ெதரியவந்தது.

