'பரிசு வழங்குவதில் குழப்பம் நீடிக்கிறது' பாலமேடு: அரசுப் பணி கோரும் 21 காளைகளை அடக்கிய வீரர்

'பரிசு வழங்குவதில் குழப்பம் நீடிக்கிறது' பாலமேடு: அரசுப் பணி கோரும் 21 காளைகளை அடக்கிய வீரர்

2 mins read
fedf58d1-c0a7-4b37-87f6-778c3aa60f96
மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 24 காளைகளை அடக்கி முதல்வரின் கார் பரிசை வென்ற கார்த்திக் ராஜா. -
multi-img1 of 2

மதுரை: ஜல்­லிக்­கட்­டுப் போட்­டி­யில் உயி­ரைப் பண­யம் வைத்து வீரர்­கள் வெற்­றி­வாகை சூடும் நிலை­யில், பரிசு வழங்­கு­வ­தில் இன்னும் குழப்­பம் நீடிப்­பதா­க வெற்­றி­பெற்ற காளை­யர்­கள் அதி­ருப்தி தெரி­வித்­துள்­ள­னர்.

வெற்­றி­யா­ளர்­க­ளைத் தீர்­மா­னிப்­பதில் ஆள் பல­ம் முக்­கிய பங்கு வகிப்­ப­தாக குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளார் மதுரை மாவட்­டம், பால­மேடு ஜல்­லிக்­கட்­டுப் போட்­டி­யில் இரண்­டா­வது பரிசு பெற்ற கார்த்­திக் ராஜா.

இதே­போல், 21 காளை­களை அடக்கி, சிறந்த மாடு­பிடி வீர­ருக் கான முதல் பரிசை வென்ற பொதும்பு கிரா­மத்­தைச் சேர்ந்த பிர­பா­க­ர­னும் வருத்­தம் தெரி­வித் துள்­ளார்.

கார்த்­திக் ராஜா செய்­தி­யா­ளர்­களி­டம் கூறு­கை­யில், "நான் ஒரு நடுத்­தர குடும்­பத்­தைச் சேர்ந்­த­வன்.

"பொது­வாக ஜல்­லிக்­கட்டு நடை­பெ­றும்­போது வெற்­றி­பெற்­ற­வர்­கள் குறித்த அறி­விப்­பில் பல்­வேறு குளறு படி­கள் இருக்­கும். அந்த குளறு படி­கள் இப்­போ­தும் தொடர்­கின்­றன.

"ஆள் பலம்­தான் யார் பரிசு பெற­வேண்­டும் என்­ப­தை­யும் வெற்றியா­ள­ரை­யும் தீர்­மா­னிக்­கிறது. இதன்­மூ­லம் அடித்­தட்டு நிலை­யில் இருந்து வரு­கின்ற என்­னைப் போன்­ற­வர்­கள் பெரி­தும் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

"கடந்­த ஆண்டு நான் அதிக காளை­க­ளைப் பிடித்­த­போ­தும்­கூட எனக்கு முதல் பரிசு வழங்­கப்­ப­ட­வில்லை. இரண்­டாம் பரி­சு­தான் கிடைத்­தது. அத­னால், அப்­போது விழா­வைப் புறக்­க­ணித்­துச் சென்­றேன்.

"இனி­யும், வருங்­கா­லத்­தில் இது­போன்ற நிலை தொட­ரா­மல் மாற­வேண்­டும்," என்­றார்.

தமி­ழ­கத்­தில் போகிப் பொங்­க­லன்று இவ்­வாண்­டுக்­கான முதல் ஜல்­லிக்­கட்­டுப் போட்டி தச்­சங்­குறிச்சி கிரா­மத்­தில் தொடங்­கி­யது. அதி­லி­ருந்து, இப்­போட்­டி­கள் தின­மும் களை­கட்டி வரு­கின்­றன.

மதுரை: மதுரை மாவட்டம், பால மேட்டில் மாட்டுப் பொங்கல் தினத்தன்று நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பிரபாகரன் முதலிடம் பிடித்து பரிசை வென்றுள்ளார்.

இவர், செய்தியாளர்களிடம் பேசிய போது, "ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசாங்க வேலை வழங்க வேண்டும். முதல்வர் எனது கோரிக்கை குறித்து ஒரு நல்ல முடிவெடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார். 21 காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப் பட்டது. படங்கள்: ஊடகம்