ஊரடங்கால் பலன்; தொற்றுப் பரவல் வேகம் குறைந்தது

ஊரடங்கால் பலன்; தொற்றுப் பரவல் வேகம் குறைந்தது

2 mins read
e9487199-4a30-4863-8afe-7d4d1dffa5ea
-

அமைச்சர்: கொரோனா சிகிச்சைக்காக 100 சித்த மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்

சென்னை: ஞாயிற்­றுக்­கி­ழமை முழு ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தால் நல்ல பலன் கிடைக்­கும் என தமி­ழக மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை முழு ஊட­ரங்கு கார­ண­மாக தமிழகத்தில் கொரோனா பர­வல் வேகம் குறைந்­துள்­ளது என்­றும் அவர் நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசும்­போது குறிப்­பிட்­டார்.

இம்­முறை ஊர­டங்­கின்­போது பொது­மக்­கள் மிகுந்த கட்­டுப்­பாட்டு­டன் கொரோனா வழி­காட்டி விதி­மு­றை­க­ளைக் கடைப்­பி­டித்­த­தா­க­வும் அவர் பாராட்­டி­னார்.

நாட்­டின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் தொற்­றுப் பர­வல் அதி­க­ரித்து வரும் நிலை­யில், சென்­னை­யில் அமைக்­கப்­பட்­டுள்ள கொரோனா கண்­கா­ணிப்பு மையத்தை அவர் பார்­வை­யிட்­டார்.

அங்கு சிகிச்சை பெறு­வோ­ரி­டம் அவர்­க­ளு­டைய உடல்­நிலை குறித்­தும் அங்கு அளிக்­கப்­படும் உணவு உள்­ளிட்ட மற்ற வச­தி­கள் குறித்­தும் அமைச்­சர் விவ­ரங்­க­ளைக் கேட்­ட­றிந்­தார்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், தடுப்­பூசி மட்­டும்­தான் ஓமிக்­ரான் தொற்­றில் இருந்து தற்­காத்­துக்­கொள்ள கைவ­சம் உள்ள ஒரே ஆயு­தம் என்­றார்.

தமி­ழ­கம் முழு­வ­தும் தற்­போது கொரோனா சிகிச்­சைக்­காக 91,902 படுக்­கை­கள் தயார் நிலை­யில் உள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், அண்­மைய சில நாள்­க­ளாக தொற்று அதி­க­ரித்த போதும், மருத்­து­வ­மனை­களில் இது­வரை 8,912 பேர் மட்­டுமே அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தா­கச் சுட்­டிக்­காட்­டி­னார்.

கொரோனா தொற்­றுக்­குள்­ளான அனை­வ­ருமே மருத்­து­வ­ம­னை­களை நாட வேண்­டி­ய­தில்லை என்­றார் அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன்.

லேசான அறி­குறி உள்­ள­வா்கள் மருத்­துவ ஆலோ­ச­னைக்குப் பிறகு தங்­களை வீடு­க­ளி­லேயே தனிமைப்­ப­டுத்திக் கொள்­ள­லாம் என்­றும் வீடு­களில் உள்­ள­வா்­களைக் கண்­காணிக்க அந்­தந்த மாவட்ட நிர்­வா­கம் உரிய ஏற்­பா­டு­க­ளைச் செய்­யும் என்­றும் அவர் கூறி­னார்.

"கொரோனா பாதிப்பு ஏற்­பட்டா­லும்­கூட உயி­ரி­ழப்பை தவிா்க்க தடுப்­பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இரண்டு தடுப்­பூசிகளைப் போட்டுக்கொண்டால் இறப்­பின் விளிம்­புக்குச் செல்லத் தேவை­யில்லை," என்­றார் அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன்.

மேலும் நூறு சித்த

மருத்­துவ மையங்­கள்

கொரோனா தொற்­றுப் பாதிப்­புக்கு சிகிச்சை அளிப்­ப­தற்­காக தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­களில் புதி­தாக நூறு இடங்­களில் சித்த மருத்­துவ மையங்­கள் அமைக்­கப்­பட உள்­ள­தாகவும் அமைச்­சர் மா.சுப்பிர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

ஏற்­கெ­னவே தமி­ழ­கத்­தில் சில இடங்­களில் சித்த மருத்­துவ மையங்­கள் செயல்­பட்டு வரு­கின்­றன.

இம்­மை­யங்­கள் மூலம் ஏரா­ள­மா­னோர் கொரோனா தொற்­றில் இருந்து விடு­பட்­டுள்­ள­தாக தமிழக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

75% சிறார்­க­ளுக்­குத் தடுப்­பூசி

தமி­ழ­கத்­தில் உள்ள சிறார்­களில் சுமார் 75 விழுக்­காட்­டி­ன­ருக்கு குறு­கிய காலத்­தில் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதன் மூலம் சிறார்­க­ளுக்கு தடுப்­பூசி போடு­வ­தில் இந்­திய அள­வில் தமி­ழ­கம் முத­லி­டத்­தைப் பிடித்­துள்­ளது என்­றும் அத்­து­றையின் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

ஓமிக்­ரான் நில­வ­ரம்

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தில் நேற்று முன்­தி­னம் 11 மாவட்­டங்­களில் 22 பேர் தொற்­றுப் பாதிப்­புக்கு பலி­யா­கி­விட்­ட­னர். ஞாயிற்­றுக்­கிழமை ஒரே நாளில் புதி­தாக 23,975 பேரை கிருமி தொற்­றி­யுள்­ளது.

இது­வரை 29 மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த 241 பேருக்கு ஓமிக்­ரான் பாதிப்பு இருப்­பது உறு­தி­யாகி உள்­ள­தாக சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். அவர்­கள் அனை­வ­ருமே சிகிச்­சைக்­குப் பின் தொற்­றில் இருந்து முழு­மை­யாக மீண்­டுள்­ள­னர்.