அலங்காநல்லூரில் அசத்தல்: 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுடன் நடந்த ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூரில் அசத்தல்: 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுடன் நடந்த ஜல்லிக்கட்டு

2 mins read
5cb88471-0d1b-4f78-bb84-9587be4adeb5
நேற்று நடைபெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் துடிப்புடன் செயல்பட்டு பல காளைகளை அடக்கினர்.படம்: ஊடகம் -

மதுரை: உலக அள­வில் புகழ்­பெற்ற அலங்­கா­நல்­லூர் ஜல்­லிக்­கட்டு நேற்று சிறப்­பாக நடந்­தே­றி­யது. இம்­முறை சுமார் 150 பார்­வை­யாளர்­க­ளுக்கு மட்­டுமே அனு­மதி வழங்­கப்­பட்­டது என்­ற­போ­தி­லும், உல­கெங்­கி­லும் உள்ள லட்­சக்­க­ணக்­கான தமி­ழர்­களும் ஜல்­லிக்­கட்டு ஆர்­வ­லர்­களும் தொலைக்­காட்சி, சமூக ஊட­கங்­கள் மூலம் அலங்கா­நல்­லூர் ஜல்­லிக்­கட்­டைக் கண்டு ரசித்­த­னர்.

இம்­முறை அலங்­கா­நல்லூர் ஜல்­லிக்­கட்­டில் சுமார் 700 காளைகள் பங்­கேற்­றன. அவற்றை அடக்குவதற்கு 300 மாடு­பிடி வீரர்­கள் கள­மி­றங்­கி­னர்.

திரு­நெல்­வேலி, திண்­டுக்­கல், திருச்சி, ராம­நா­த­பு­ரம், சிவ­கங்கை, தேனி உள்­ளிட்ட பல்­வேறு மாவட்­டங்­களில் இருந்து காளை­கள் அழைத்து வரப்­பட்ட நிலை­யில், தென் மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த இளை­ஞர்­கள் அவற்றை அடக்க துணிச்­ச­லு­டன் பங்­கேற்­ற­னர்.

பார்­வை­யா­ளர்­கள் குறை­வாக இருந்­த­போ­தி­லும், அலங்­கா­நல்­லூர் உட்­பட அதன் சுற்று வட்­டா­ரப் பகுதி­களில் இரண்­டா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட காவல்­து­றை­யி­னர் பாது­காப்புப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

ஆங்­காங்கே வாக­னச் சோதனை நடத்­தப்­பட்­டது. இதன் மூலம் வெளி­யூர்­களில் இருந்து வந்த பார்­வை­யா­ளர்­கள் அடை­யா­ளம் காணப்­பட்டு திருப்பி அனுப்­பப்­பட்­ட­னர். உள்­ளூர் மக்­க­ளுக்­கும் அனு­மதி மறுக்­கப்­பட்­ட­தால் அவர்­கள் சோக­ம­டைந்­த­னர்.

இதை­ய­டுத்து ஜல்­லிக்­கட்டு நேர­லை­யாக தொலைக்­காட்சி அலை­வ­ரி­சை­க­ளி­லும் இணை­யத்­தி­லும் ஒளி­ப­ரப்­பா­கிறது என்று விழாக்­கு­ழு­வி­னர் அறி­வித்­த­னர்.

அமைச்­சர் பி.மூர்த்­தி­யும் மாவட்ட ஆட்­சி­யர் அனிஷ்­கே­ரும் நேற்று காலை கொடி­ய­சைத்து ஜல்லிக்­கட்டை தொடங்கிவைத்­த­னர். இதை­ய­டுத்து வாடி­வா­ச­லில் இருந்து ஒவ்­வொன்­றாக மாலை வரை எழு­நூறு காளை­கள் அவிழ்த்து­விடப்­பட்­டன.

சில மாடு­கள் களத்­தில் நீண்ட நேரம் நின்­ற­போ­தும் அவற்றை யாரும் நெருங்க முடி­ய­வில்லை. சில மாடு­பிடி வீரர்­கள் துணிச்­சலாகச் செயல்­பட்டு சில காளை­களை அடக்­கி­னர்.

அலங்­கா­நல்­லூ­ரி­லும் சிறந்த வீர­ருக்கு முதல்­வர் மு.க.ஸ்டா­லின் சார்­பில் முதல் பரி­சாக கார் வழங்­கப்­பட்­டது.

மேலும் தொலைக்­காட்­சிப் பெட்டி, பீரோ, கட்­டில் என மேலும் பல்­வேறு பரி­சு­கள் வழங்­கப்­பட்­டன.

போட்டியின் முடிவில் வெற்றி­பெற்ற அனைத்து மாடு­பிடி வீரர்­க­ளுக்­கும் ஒரு தங்­கக்­காசு பரி­சாக வழங்­கப்­பட்­டது.