திருப்பத்தூர்: சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய உடற்பயிற்சியாளரை திருப்பத்தூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
26 வயதான நரசிம்மன் என்பவர் உடற்பயிற்சியாளராக உள்ளார். திருமணமாகி, இரண்டு மனைவிகள் உள்ளனர். எனினும், குடும்பத் தகராறு காரணமாக இருவரும் இவரைப் பிரிந்து சென்றுவிட்டனர்.
இந்நிலையில், சமூக வலைத்தளம் மூலமாக நரசிம்மனுக்கும் தர்மபுரியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அம்மாணவியைச் சந்திக்க இருசக்கர வாகனத்தில் தர்மபுரி சென்றுள்ளார் நரசிம்மன்.
அப்போது 15 வயதே ஆன அம்மாணவியிடம் பல்வேறு விதமாகப் பேசி திருமண ஆசையைத் தூண்டிவிட்டு, கையோடு கடத்திச் சென்றுவிட்டார். இதையடுத்து, காவல்துறையினர் அவருக்கு வலைவீசினர்.
நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவரை தெலுங்கானாவில் வைத்து கைது செய்தனர்.
விசாரணையில், பள்ளி மாணவியை கேரளா, ஆந்திரா என ஐந்து மாநிலங்களுக்கு இருசக்கர வாகனத்திலேயே அழைத்துச் சென்று அவர் உல்லாசம் அனுபவித்தது தெரிய வந்தது.
அவரால் சீரழிக்கப்பட்ட மாணவிக்கு எட்டு மாத கைக்குழந்தை இருப்பதும் காவல்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் நரசிம்மன் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

