மதுரை: மதுரையைச் சேர்ந்த 16 வயதான சினேகா (படம்) என்ற இந்தச் சிறுமி ஜல்லிக்கட்டு காளைக்குப் பயிற்சி அளிக்கிறார்.
இந்த ஆண்டு இவர் பயிற்சி அளித்த காளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளது.
"சிறு வயதிலேயே ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டத்தைப் பார்த்ததால் அதன்பால் ஒரு பிடிப்பு ஏற்பட்டது. அப்பாதான் காளை மாடு வாங்கிக்கொடுத்தார். அதைப் பாசத்துடன் வளர்த்து வருகிறேன்," என்கிறார் சினேகா.
வாரத்தில் இருமுறை தன் காளை மாட்டுக்குப் பயிற்சி அளிப்பதாகச் சொல்பவர், இது மிக கடினமான பணி என்கிறார்.

