செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
9f3e34fe-d7f6-4a81-9b98-6d3330a0857c
-

தமிழகம்: வாகன விற்பனை அதிகரிப்பு

சென்னை: கொரோனா நெருக்கடி வேளையிலும் தமிழகத்தில் கடந்த ஆண்டு வாகன விற்பனை அதிகரித்துள்ளது. 2021ல் மொத்தம் 1.51 மில்லியன் வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டை விட இது 1.52% அதிகம் என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் வைப்பதில் தகராறு, கத்திக்குத்து; இளையர் பலி

சிவகங்கை: திருப்புவனம் அருகே உள்ள இலந்தைகுளம் கிராமத்தில் கடந்த 15ஆம் தேதி இரவு பொங்கல் விழா கொண்டாடினர். அப்போது இரு தரப்பினரிடையே யார் பொங்கல் வைப்பது என்பதில் வாக்குவாதம் மூண்டது. பின்னர் இது கைகலப்பில் முடிய, இருதரப்பினரும் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில், கருப்புச்சாமி என்ற இளைய ருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்தி லேயே பலியானார். இது தொடர்பாக ஐவர் கைதாகினர்.

நள்ளிரவில் கொட்டிய மழை; வெள்ள நீருடன் ஊருக்குள் புகுந்த மீன்கள்

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள போடி தொகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள கொட்டக்குடி ஆற்றில் தண்ணீர் வரத்து அதி கரித்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்வழிப் பாதையில் குப்பைகள் குவிக்கப்பட்டிருந்ததால் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ளநீருடன் மீன்களும் மிதந்து வந்ததால், அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் அவற்றைப் பிடித்தனர்.