ஒரே நாளில் 4,000 பேருந்துகள் இயக்கம்: விழிபிதுங்கிய சென்னை

ஒரே நாளில் 4,000 பேருந்துகள் இயக்கம்: விழிபிதுங்கிய சென்னை

2 mins read
946b21ee-aa90-42f0-bf4a-13371f762328
சென்னையில் வாகன நெரிசல். கோப்புப்படம்: ஊடகம் -

பொங்கலுக்கு சொந்த ஊர் சென்ற ஆயிரக்கணக்கானோர் திரும்பினர்

சென்னை: பொங்­கல் பண்­டிகை கொண்­டாட்­டத்­துக்­காக சொந்த ஊர்­க­ளுக்­குச் சென்ற ஆயி­ரக்­கணக்­கான மக்­கள் மொத்­த­மாக சென்னை திரும்­பி­ய­தால், கோயம்­பேடு, கிண்டி, போரூர் உள்­ளிட்ட பகு­தி­களில் கடந்த இரு தினங்­களாக கடும் போக்­கு­வ­ரத்து நெரி­சல் ஏற்­பட்­டது.

இத­னால் பய­ணி­களும் வாகன­மோட்­டி­களும் சிர­மங்­க­ளுக்கு ஆளா­கி­னர்.

பொங்­கல் திரு­நா­ளை­யொட்டி சென்­னை­யில் இருந்து சுமார் 337,000 பேர் கடந்த வாரம் சொந்த ஊர்­களுக்­குப் புறப்­பட்­டுச் சென்­ற­னர். குறிப்­பாக தென்மாவட்­டங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் அதிக அள­வில் பய­ணம் மேற்­கொண்­ட­னர்.

பொது­மக்­க­ளின் வச­திக்­காக தமி­ழக அரசு சிறப்­புப் பேருந்­து­களை இயக்­கு­வ­தாக அறி­வித்­தது. அதே­போல் பண்­டிகை முடிந்து சொந்த ஊர்­களில் இருந்து சென்னை திரும்பு­வ­தற்கு வச­தி­யாக கடந்த 17ஆம் தேதி முதல் இன்று வரை சுமார் பத்­தா­யி­ரம் சிறப்­புப் பேருந்து­கள் இயக்­கப்­ப­டு­கின்­றன.

குறிப்­பாக நேற்று முன்­தி­னம் மட்­டும் 4,130 பேருந்­து­கள் இயக்­கப்­பட்­டதை அடுத்து, சென்னை கோயம்­பேட்­டில் உள்ள பேருந்து நிலை­யத்­துக்கு பல்­வேறு மாவட்­டங்­களில் இருந்து பேருந்­து­கள் வந்­த­வண்­ணம் இருந்­தன.

இத­னால் கோயம்பேடு நோக்­கிச் செல்­லும் சாலை­கள் அனைத்­தும் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லால் திண­றின.

பெரும்­பா­லான பய­ணி­கள் இரவு நேரப் பய­ணம் மேற்­கொண்­ட­தால், சென்­னை­யில் கடந்த இரு தினங்­க­ளாக அதி­காலை சுமார் 4.30 மணி­யில் இருந்து 7.30 மணி­வரை அர­சுப் பேருந்­து­களும் தனி­யார் ஆம்னி பேருந்­து­களும் கோயம்­பேடு செல்­லும் சாலை­களில் வரி­சை­யாக நின்­றி­ருந்­தன.

தென்மாவட்­டங்­கள், கோவை­யில் இருந்து சென்னை வந்த பய­ணி­க­ளின் எண்­ணிக்­கையே அதி­க­மாக இருந்­தது என்­றும் பெரும்­பா­லான பேருந்­து­கள் ஒரே சம­யத்­தில் சென்­னையை வந்­த­டைந்­த­தால் போக்­கு­வ­ரத்து நெரி­சல் ஏற்­பட்­டது என்­றும் அதி­கா­ரி­கள் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அரசு போக்­கு­வ­ரத்து கழ­கத்­தின் சிறப்­புப் பேருந்­து­கள் இன்று மாலை வரை இயக்­கப்­பட உள்­ளன. இந்­தப் பேருந்­து­கள் மூலம் சுமார் 400,000 பேர் சென்னை வந்­த­டைந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.