கோவையில் தொற்று பாதிப்பு 40%ஆக அதிகரிக்க வாய்ப்பு

கோவையில் தொற்று பாதிப்பு 40%ஆக அதிகரிக்க வாய்ப்பு

1 mins read
d49b5e94-e56d-4a62-b8c5-970f4cdbbaa2
-

கோவை: கடந்த சில தினங்­க­ளாக கோவை மாவட்­டத்­தில் கொரோனா தொற்­றுப் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரு­கிறது. இதே நிலை நீடித்­தால் அங்­குள் தொற்­றுப் பாதிப்பு 40 விழுக்­காடு வரை அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ள­தாக சுகா­தா­ரத்­துறை எச்­ச­ரித்­துள்­ளது.

அங்கு தற்­போது நாள்­தோ­றும் பத்­தா­யி­ரம் பேருக்கு தொற்­றுப் பரிசோ­தனை நடத்­தப்­ப­டு­கிறது. அதில் 18 விழுக்­காட்­டி­ன­ருக்கு தொற்­றுக்­கான லேசான அறி­குறி­களா­வது தென்­ப­டு­வ­தாக அதி­காரி­கள் கூறு­கின்­ற­னர்.

மக்­கள் பொறுப்­பு­டன் செயல்­படா­விட்­டால் இது 40 விழுக்­கா­டாக அதி­க­ரிக்­கும் எனக் கூறப்­ப­டு­கிறது.

"கடந்த இரண்­டா­வது அலை­யின் போது அதி­க­பட்­ச­மாக 4,700-க்கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு நோய்த் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. இப்­போது அதை­விட அதிக பாதிப்பு ஏற்­படும் என்று கூறப்­ப­டு­வ­தால், மருத்­து­வ­ம­னை­களில் கூடு­தல் படுக்கை­கள் ஏற்­பாடு செய்­யப்­படு­கின்றன. மருத்­துவ உயிர்­வாயு, மருந்­து­கள், மருத்­து­வக் கரு­வி­கள் ஆகி­யன தயார் நிலை­யில் உள்­ளன," என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.