லாட்டரிச் சீட்டு வாங்கிய சில மணிநேரங்களில் பரிசு

லாட்டரிச் சீட்டு வாங்கிய சில மணிநேரங்களில் பரிசு

1 mins read
83ebb6ea-0712-4270-ad4c-9ff0efaedd23
-

திரு­வ­னந்­த­புரம்: கேர­ளா­வைச் சேர்ந்த சாயம் பூசும் தொழி­லாளி ஒரு­வ­ருக்கு லாட்­ட­ரிச் சீட்டு வாங்­கிய சில மணி நேரங்­களில் ரூ.12 கோடி முதல் பரி­சா­கக் கிடைத்­துள்­ளது.

கோட்­ட­யம் பகு­தி­யைச் சேர்ந்த சதா­னந்­தன் என்ற அந்த ஆட­வர் கடந்த 50 ஆண்­டு­க­ளாக கட்­ட­டங்­களுக்கு சாயம் பூசும் தொழி­லில் ஈடு­பட்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில், கடந்த ஞாயிற்­றுக்­கிமை இறைச்சி வாங்க சென்றவர், சந்­தை­யில் லாட்­ட­ரிச் சீட்டு விற்கப்­படு­வ­தைப் பார்த்து, தானும் ஒரு சீட்டை வாங்­கி­யுள்­ளார். அந்­தச் சீட்­டுக்­கு­தான் முதல் பரிசு விழுந்துள்­ளது.

"சந்­தை­யில் இருந்து வீடு திரும்­பிய சில மணி நேரங்­க­ளுக்­குள் குலுக்­கல் நடந்­துள்­ளது. மிக விரை­வாக அதன் முடி­வு­கள் தெரிந்­து­விட்­டது.

"பரி­சுத் தொகையைக் கொண்டு எனது இரண்டு மகன்­களின் வாழ்க்­கைத் தரத்தை மேம்­படுத்­து­வேன்," என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசும்­போது சதா­னந்­தன் தெரி­வித்­தார்.