பெண் கல்வியை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பயணம்

சென்னை: பெண் கல்­வியை முன்­னி­றுத்தி, மக்­கள் மத்­தி­யில் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தும் வித­மாக மும்­பை­யைச் சேர்ந்த பத்து வயது சிறுமி ஜெய்­பாரி சாயி­ப­டேல் காஷ்­மீர் முதல் கன்­னி­யா­கு­மரி வரை மிதி­வண்­டி­யில் பய­னம் மேற்­கொண்­டுள்­ளார்.

அவ­ருக்கு பல்­வேறு தரப்­பி­ன­ரும் பாராட்­டு­களும் வாழ்த்­தும் தெரி­வித்­துள்­ள­னர்.

மகா­ராஷ்­டி­ரா­வின் தானே பகு­தி­யில் வசிக்­கும் ஆஷிஷ் படேல் லாரி மூலம் தண்­ணீர் விநி­யோ­கிக்­கும் தொழி­லில் ஈடு­பட்­டுள்­ளார். இவ­ரது மக­ளான ஜெய்­பாரி ஐந்­தாம் வகுப்பு படித்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், நாடு முழு­வ­தும் மிதி­வண்­டி­யில் வலம் வந்து, பெண் கல்வி குறித்து விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்த விரும்­பி­யுள்­ளார் இச்­சி­றுமி.

இதை­ய­டுத்து, பெற்­றோ­ரின் ஆத­ர­வு­டன் கடந்த டிசம்­பர் 14ஆம் தேதி காஷ்­மீ­ரில் இருந்து தன் பய­ணத்­தைத் தொடங்­கிய சிறுமி ஜெய்­பாரி, பஞ்­சாப், ஹரி­யானா, ராஜஸ்­தான், குஜ­ராத், மகா­ராஷ்­டிரா, கர்­நா­டகா வழி­யாக சுமார் 3,600 கிலோ மீட்­டர் பய­ணம் செய்து நேற்று முன்­தி­னம் தமி­ழ­கம் வந்­த­டைந்­தார்.

இந்­நி­லை­யில், விரு­து­ந­கர் அரிமா சங்க நிர்­வா­கி­கள் சிறுமி ஜெய்­பா­ரிக்கு வர­வேற்பு அளித்­த­னர். அவ­ருக்கு நினை­வுப்­ப­ரி­சும் வழங்­கப்­பட்­டது.

மேலும் எதிர்­வ­ரும் 21ஆம் தேதி கன்­னி­யா­கு­ம­ரி­யில் தனது பய­ணத்தை நிறைவு செய்ய உள்ள சிறுமியின் சாதனைப் பயணத்தை அனைவரும் பாராட்டினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!