ஐந்து நாள் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

ஐந்து நாள் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

1 mins read
6d665863-e9e7-4c6f-ac46-c2811afb2a8a
-

பழனி: கொரோனா கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக தமி­ழ­கத்­தில் உள்ள கோவில்­கள் ஐந்து நாள்­க­ளுக்குப் பிறகு நேற்று திறக்­கப்­பட்­டன. இதை­ய­டுத்து, ஏரா­ள­மான பக்­தர்­கள் சாமி தரி­ச­னம் செய்­த­னர்.

முரு­கக் கட­வு­ளின் திருத்­த­லங்­களில் ஒன்­றான பழனி மலைக் கோவி­லில் ஏரா­ள­மான பக்­தர்­கள் காவ­டி­க­ளு­டன் வந்து தரி­ச­னம் மேற்­கொண்டு வழி­பட்­ட­னர்.

கொரோனா தொற்­றுப் பரவலைக் கட்­டுப்­ப­டுத்த தமிழகத்­தில் கடந்த 14ஆம் தேதி முதல் நேற்று வரை தொடர்ந்து ஐந்து நாள்­களுக்கு வழி­பாட்டுத் தலங்கள் மூடப்­பட்­டி­ருந்­தன.

இத­னால் தைப்­பூசத்­தை­யொட்டி, பக்­தர்­கள் தங்­கள் நேர்த்­திக் கடன்­க­ளைச் செலுத்த முடி­ய­வில்லை. ஏரா­ள­மான பக்­தர்­கள் கோவில்­க­ளுக்கு வெளியே பிரார்த்­தனை செய்து ஏமாற்­றத்­து­டன் திரும்­பி­னர்.

வெளி­யூர்­களில் இருந்து பழனி மலைக்­கோ­வி­லுக்கு பாத யாத்­தி­ரை­யாக வந்­த­வர்­கள் திரும்­பிச் செல்ல இய­லா­மல், அங்­கேயே காத்­தி­ருந்து நேற்று சாமி தரி­ச­னம் செய்­த­னர்.

இதே­போல் மாநி­லம் முழு­வ­தும் பல்­வேறு முரு­கன் கோவில்­களில் பக்­தர்­கள் திர­ளாக வந்து சாமி தரி­ச­னம் செய்­தனர்.