தமிழகம்: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 170,000 ஆனது

தமிழகம்: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 170,000 ஆனது

1 mins read
32028f6e-8346-4f65-a434-02a39b6a0d5c
-

சென்னை: தமி­ழ­கத்­தில் தற்­போது கொரோனா தொற்று பாதிப்­புக்கு சிகிச்சை பெற்று வரு­வோர் எண்­ணிக்கை 170,000ஆக அதி­க­ரித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் புதி­தாக 26,981 பேருக்கு கிருமி தொற்­றி­யுள்­ளது.

மாநி­லம் முழு­வ­தும் சுமார் ஒன்­ப­தா­யி­ரம் பேர் மட்­டுமே மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­வ­தா­க­வும் தொற்று பாதித்த 94 விழுக்­காட்­டி­னர் வீட்டு கண்­கா­ணிப்­பில் உள்­ள­னர் என்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தில் 3,787 இடங்­கள் தடை செய்­யப்­பட்ட பகு­தி­க­ளாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

சென்­னை­யில் 9,237 தெருக்­களில் தொற்று பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்ட அவர்,

தமி­ழ­கத்­தில் மொத்­த­முள்ள 1.21 லட்­சம் குக்­கி­ரா­மங்­களில் 24 ஆயி­ரத்­துக்­கும் மேலான கிரா­மங்­களில் தொற்று பாதிப்­புள்­ளது என்­றார்.

நக­ரங்­களில் 1.27 லட்­சம் தெருக்­களில் 28 ஆயி­ரத்­துக்­கும் மேலான தெருக்­களில் தொற்று இருக்­கிறது.

இதற்­கி­டையே, தமி­ழ­கம் முழு­வ­தும் 600 மையங்­களில் நேற்று பூஸ்­டர் தடுப்­பூசி சிறப்பு முகாம்­கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.