முன்னாள் அமைச்சர் அன்பழகன் மீது சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு

57 இடங்களில் 200 அதிகாரிகள் சோதனை; ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக புகார்

புது­டெல்லி: வரு­மா­னத்­துக்கு அதி­க­மாக சொத்துக் குவித்­தி­ருப்­ப­தாக எழுந்­துள்ள புகாரை அடுத்து, முன்­னாள் அமைச்­சர் கே.பி. அன்­ப­ழ­கன் வீட்­டி­லும் அவ­ருக்குத் தொடர்­பு­டைய இடங்­க­ளி­லும் லஞ்ச ஒழிப்­புத் துறை­யி­னர் நேற்று அதி­ரடி சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர்.

சென்னை, தர்­ம­புரி உட்­பட மாநி­லத்­தின் பல்­வேறு பகு­தி­களில் இந்தச் சோதனை நடை­பெற்­றது.

கே.பி. அன்­ப­ழ­கன், அவ­ரது மனைவி, இரு மகன்­கள், மரு­ம­கள் ஆகிய ஐந்து பேர் மீதும் சொத்­துக்­கு­விப்பு வழக்கு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது என்­றும் மொத்­தம் 11.32 கோடி ரூபாய் மதிப்­புள்ள சொத்­து­களை அவர் சேர்த்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரி­வித்­துள்­ளது.

கடந்த அதி­முக ஆட்­சிக்­கா­லத்­தில், அன்­றைய அமைச்­சர்­கள் பலர் முறை­கே­டாக சொத்து குவித்­துள்­ள­தாக தொடர்ந்து புகார்­கள் வெளி­வந்த வண்­ணம் உள்­ளன. அதன் பேரில், முன்­னாள் அமைச்சர்­கள் மீது வழக்குகள் பதி­வாகி வரு­கின்றன.

இது­வரை முன்­னாள் அமைச்­சர்­கள் தங்­க­மணி, வேலு­மணி, சி.விஜ­ய­பாஸ்­கர், எம்.ஆர்.விஜ­ய­பாஸ்­கர், கே.சி.வீர­மணி ஆகிய ஐந்து பேர் சொத்­துக்­கு­விப்பு வழக்­கு­களில் சிக்கி உள்­ள­னர். இந்­நி­லை­யில், கே.பி.அன்­ப­ழ­கன் மீதும் வழக்­குப் பதி­வாகி உள்­ளது.

நேற்று காலை தர்­ம­பு­ரி­யில் உள்ள கே.பி.அன்­ப­ழ­கன் வீட்­டி­லும் அவ­ரு­டன் தொடர்­புள்ள 57 இடங்­க­ளி­லும் லஞ்ச ஒழிப்­புத் துறை­யி­னர் ஒரே சம­யத்­தில் சோதனை மேற்­கொண்­ட­னர்.

மொத்­தம் 200 அதி­கா­ரி­கள் இந்த­ந­ட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­ட­தா­க­வும் பல்­வேறு முக்­கிய ஆவ­ணங்­களை அவர்­கள் கைப்­பற்றி உள்­ள­தா­க­வும் ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கே.பி. அன்­ப­ழ­கன் 2016 முதல் 2021 வரை உயர்­கல்­வித்­துறை அமைச்­ச­ராக இருந்­த­போது வரு­மா­னத்­திற்கு அதி­க­மாக சொத்து சேர்த்­த­தாக வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்ள நிலை­யில், அர­சி­யல் பழி­வாங்­கும் நட­வ­டிக்­கை­யாக இந்த வழக்கு தொடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

நேற்று லஞ்ச ஒழிப்­புத்­து­றை­யினர் நடத்­திய சோத­னைக்கு எதிர்ப்பு தெரி­வித்து கே.பி. அன்­ப­ழ­க­னின் ஆத­ர­வா­ளர்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!