இலங்கைக் கடற்படைக் கப்பல் மோதிய விபத்தில் ஏழு தமிழக மீனவர்கள் மீட்பு

ராமேசுவரம்: நடுக்­க­ட­லில் இலங்கை கடற்­படை நடத்­திய திடீர் தாக்கு­தலால் தமி­ழக மீன­வர்­க­ளின் விசைப்­ப­டகு ஒன்று கட­லில் மூழ்­கி­யது. இதில், அந்­தப் பட­கில் இருந்த ஏழு மீன­வர்­கள் கட­லில் விழுந்து தத்­த­ளித்­த­னர்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற மீன­வர்­கள் உயி­ருக்­குப் போரா­டிய ஏழு மீன­வர்­க­ளை­யும் காப்­பாற்றி கரை­சேர்த்­த­னர்.

தமி­ழக மீன­வர்­கள் மீது இலங்கை கடற்­ப­டை­யி­னர் தாக்­கு­தல் நடத்­து­வது நீடித்து வரு­கிறது.

நேற்று முன்­தி­னம் ராமே­சு­வ­ரத்­தில் இருந்து 550க்கும் மேற்­பட்ட பட­கு­களில் 2,500க்கும் மேற்­பட்ட மீன­வர்­கள் மீன்­பி­டிக்க கட­லுக்­குச் சென்­ற­னர்.

கச்­சத்­தீவு அருகே மீன்­பி­டித்­துக் கொண்­டி­ருந்­த­போது, திடீ­ரென அங்கு வந்த இலங்­கைக் கடற்­படை­யி­னர், தங்­க­ளு­டைய கப்பலை மீன­வர்­க­ளின் சிறிய படகு மீது வேக­மாக மோதி­யுள்­ள­னர்.

இதில், அந்த விசைப்­ப­டகு கடலில் கவிழ்ந்­தது. பட­கில் இருந்த ஏழு மீன­வர்­களும் கடல்­நீ­ரில் குதித்­த­னர். நடுக்­க­ட­லில் அவர்கள் தத்­த­ளித்­த­படி உயி­ருக்­குப் போராடு­வ­தைக் கண்ட மற்ற மீன­வர்­கள் கடும் அதிர்ச்சி அடைந்­த­னர்.

"இலங்கை கடற்­ப­டைக் கப்­பல் மோதி­ய­தில் மீன­வர்­க­ளின் விசைப்­ப­ட­கில் விரி­சல் ஏற்­பட்­டது. இத­னால் பட­குக்­குள் கடல்­நீர் புகுந்­தது.

"இதை­ய­டுத்து, படகு ஒரு­பு­ற­மாக கவி­ழத் தொடங்­கி­ய­தால் மீன­வர்­கள் வெளியே குதித்­த­னர். அவர்­க­ளைக் காப்­பாற்­றா­மல் இலங்கை கடற்­ப­டைக் கப்­பல் அங்­கி­ருந்து சென்­று­விட்­டது.

"இப்­போ­தெல்­லாம் நம் மீன­வர்­கள் வாரத்­துக்கு இரு­முறை மட்­டுமே மீன்­பி­டிக்க கட­லுக்­குச் செல்­கி­றார்­கள்.

"எந்த நேரத்­தி­லும் இலங்கை கடற்­படை தாக்­கு­தல் நடத்­தும் என்ற அச்­சமே இதற்­குக் கார­ணம்," என்று ராமே­சு­வ­ரம் மீன­வர்­கள் சங்­கத் தலை­வர் சேசு­ராஜா தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!