தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடந்த 20 நாள்களில் 463 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிப்பு

2 mins read
cf0dcc47-03e5-4b57-92d1-0e8ee0c2bd8a
-

சென்னை: தமிழகத்தில் இந்தப் புத்தாண்டு தொடங்கியது முதல் டெங்கிக் காய்ச்சல் பாதிப்பு சற்று ஏறு­மு­கம் காண்­பது­போல் தெரி­வதா­க­வும் கடந்த 20 நாள்­களில் மட்­டும் 463 பேர் இக்காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­வ­தா­க­வும் பொது சுகா­தாரத் துறை அதி­கா­ரி­கள் கூறி­யுள்ளனர்.

மக்­கள் சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியத்தில் கவ­ன­மாக இருக்­க­வேண்­டும் என­வும் அவர்கள் அறி­வு­றுத்தி உள்­ள­னர்.

மாநிலத்­தில் கடந்த ஆண்­டில் டெங்­கிக் காய்ச்­ச­லால் 6,039 பேர் பாதிக்­கப்­பட்­ட­தா­க­வும் அவர்­களில், எட்­டுப் பேர் உயி­ரி­ழந்­த­தா­க­வும் பொது சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

அதே­போன்று கடந்த ஆண்­டில் 150 பேருக்கும் மேற்­பட்டோா் சிக்­குன் குனியா, 500க்கும் அதி­க­மானோா் மலே­ரியா, 1,028 போ் எலிக் காய்ச்­சல், 2,220 போ் பாக்­டீ­ரியா தொற்று காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­ட­னர் என்றும் சுகா­தா­ரத் துறை விவரம் வெளியிட்டுள்­ளது.

இவ்­வாண்­டில் கடந்த 20 நாள்­களில் மட்­டும் 463 பேர் டெங்­கிக் காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­வ­தா­க­வும் சுகாதாரத் துறை கூறியுள்ளது.

இது­கு­றித்து பொது சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­கள் கூறு­கை­யில், "மாநி­லம் முழு­வ­தும் கொசு ஒழிப்பு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. விழிப்­பு­ணா்வு நட­வடிக்­கை­களும் முடுக்கி விடப்­பட்­டுள்­ளன.

"தேவை­யான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வும் காய்ச்­சல் முகாம்­களில் கொரோ­னா­வு­டன் டெங்கி, ஜிகா, சிக்­குன்­கு­னியா, மலே­ரியா காய்ச்­சல் உள்­ளிட்ட பாதிப்­பு­கள் கண்­ட­றி­யப்­பட்­டால் உட­ன­டி­யாக தெரி­விக்­கும்­படியும் மாவட்ட நிர்­வா­கங்­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

"கொரோனா நோய்த் தடுப்பு நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்ள பணி­யா­ளர்­கள் டெங்கிக் காய்ச்­சல் தடுப்­புப் பணி­க­ளி­லும் கவ­னம் செலுத்தி வரு­கின்­ற­னர்," என்­ற­னர்.

இதற்­கி­டையே, பொது­மக்­கள் தங்­கள் வீடு­க­ளை­யும் சுற்று வட்­டா­ரப் பகு­தி­க­ளை­யும் துாய்மை­யா­கப் பரா­ம­ரிக்­கும்­ப­டி­யும் அவர்­கள் அறி­வு­றுத்தி உள்­ள­னர்.