கே.பி.அன்பழகன்: சோதனையில் நகை, பணம், பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை அதிகாரிகள்: ரூ.3 கோடி பணம், 6 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: கடந்த அதி­முக ஆட்சி­யில் உயர்­கல்­வித் துறை அமைச்­சராக இருந்­த­வர் கே.பி. அன்­ப­ழ­கன். இவ­ருக்­குச் சொந்­த­மான வீடு, அலு­வ­ல­கங்­கள் என 58 இடங்­களில் நடத்­தப்­பட்ட சோத­னை­யில் ஏறக்­கு­றைய ரூ.3 கோடி ரொக்கம் கைப்­பற்­றப்­பட்­டுள்ளதாக லஞ்ச ஒழிப்­புத் துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

அத்­து­டன், 6 கிலோ தங்க நகை­கள், 13 கிலோ வெள்­ளிப் பொருள்­களும் கைப்பற்­றப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர்­கள் மேலும் கூறி­யுள்­ள­னர்.

முன்­னாள் அமைச்­சர் கே.பி.அன்­ப­ழ­க­னின் வீடு, அவ­ரது உற­வி­னர்­கள், நெருக்­க­மா­ன­வர்­க­ளின் வீடு­கள், அலு­வ­ல­கங்­கள் என 58 இடங்­களில் லஞ்ச ஒழிப்­புத் துறை­யி­னர் நேற்று முன்­தி­னம் ஒரே சம­யத்­தில் அதிரடிச் சோதனைகளை மேற்­கொண்­ட­னர்.

அன்­ப­ழ­க­னுக்கு நெருக்­க­மாக இருந்த பாப்­பி­ரெட்­டிப்­பட்டி தொகுதி அதி­முக எம்­எல்ஏ கோவிந்­த­சா­மி­வீட்­டி­லும் இச்சோதனை நடந்தது.

இது­தொ­டர்­பாக, லஞ்ச ஒழிப்­புத் துறை­யி­னர் வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில், கே.பி.அன்­ப­ழ­கன் வீட்­டிலிருந்து ரூ.2 கோடியே 87 லட்­சத்து 98 ஆயி­ரத்து 650 ரொக்­கப் ­ப­ணம், 6 கிலோ 637 கிராம் தங்­கம், 13 கிலோ 850 கிராம் வெள்­ளிப் பொருள்­கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

அத்­து­டன், வங்­கிப் பாது­காப்பு பெட்­ட­கத்­தின் சாவி­யும் முக்­கிய ஆவ­ணங்­களும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன எனவும் செய்­திக்­கு­றிப்­பில் கூறப்­பட்டு உள்­ளது.

திமுக ஆட்­சிக்கு வந்­த­பி­றகு இது­வரை முன்­னாள் அமைச்­சர்­கள் தங்­க­மணி, எஸ்.பி.வேலு­மணி, சி.விஜ­ய­பாஸ்­கர், எம்.ஆர்.விஜ­ய­பாஸ்­கர், கே.சி.வீர­மணி உள்ளிட்டோர் சொத்­துக்­கு­விப்பு வழக்கு­களில் சிக்கி உள்­ள­னர். இப்பட்­டி­ய­லில் கே.பி. அன்­ப­ழ­க­னும் இப்­போது சேர்ந்­துள்­ளார்.

கே.பி. அன்­ப­ழ­கன் தன்­னு­டைய வரு­மா­னத்தை விட கூடு­த­லாக ரூ.11.32 கோடி அள­வுக்கு சொத்து சேர்த்­துள்ளதாக­ லஞ்ச ஒழிப்­புத் துறை­யி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், செய்­தி­யா­ளர்­களிடம் கே.பி.அன்­ப­ழ­கன் கூறுகை யில், "பொது­மக்­க­ளுக்குப் பொங்­கல் பரி­சுத் தொகுப்பு வழங்­கி­ய­தில் ரூ.500 கோடி ஊழல் என எதிர்க்­கட்­சித் தலை­வர் பழ­னி­சாமி குற்­றம்­சாட்­டிய நிலை­யில், அந்த ரூ. 500 கோடி ஊழலை திசை திருப்பவே திமுக அரசு எனது வீட்­டில் சோதனையை நடத்தி உள்ளது. இரவு வரை நடந்த சோத­னை­யில் எனது வீட்­டி­லி­ருந்து பணம், நகை, ஆவ­ணங்­கள் எதுவும் கைப்­பற்­றப்­ப­ட­வில்லை என லஞ்ச ஒழிப்புத் துறை­யி­னர் எழுத்து மூல­மாக தெரிவித்துள்­ள­னர். ஆனால், திமுக அர­சுக்கு இணக்­க­மாக செயல்­படவேண்­டும் என்­பதற்­காக பல தொலைக்­காட்­சி­களும் எனது வீட்­டில் கட்டுகட்­டாக பணம், நகை, ஆவ­ணங்­களை கைப்­பற்­றி­ய­தாக பொய்­த் தக­வலை பரப்பி வருகின்றன. இப்பிரச்­சி­னையை சட்டரீதி­யாக எதிர்­கொள்வேன்," எனத் தெரி­வித்­தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தியதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. உப்புத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும். யார் தவறு செய்தாலும் தண்டனை அனுபவிப்பது இயல்புதான். மற்றபடி, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு இடமில்லை.

போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!