குடந்தையில் பிபின் ராவத் ஐம்பொன் சிலை வடிவமைப்பு

குடந்தையில் பிபின் ராவத் ஐம்பொன் சிலை வடிவமைப்பு

1 mins read
e8245ae6-f7b8-4bbe-938f-78eb08356f4b
கும்பகோணம், நாகேஸ்வரன் கோவில் வீதியிலுள்ள சிற்பக் கூடத்தில் பிபின் ராவத்தின் சிலையை வடிக்கும் சிற்பிகள். படம்: ஊடகம் -

கும்­ப­கோ­ணம்: அண்­மை­யில் ஹெலி­காப்­டர் விபத்­தில் உயி­ரி­ழந்த முப்படைத் தலைமைத் தள­பதி பிபின் ராவத்­தின் ஐம்­பொன்­னா­லான சிலையை வடிக்­கும் பணி கும்­ப­கோ­ணத்­தில் உள்ள சிற்­பக் கூடத்­தில் நடந்து வரு­கிறது.

நீல­கிரி மாவட்­டம், குன்­னுா­ரில் கடந்த டிசம்­பர் மாதம் 8ஆம் தேதி நடந்த ஹெலி­காப்­டர் விபத்­தில் தலை­மைத் தள­பதி பிபின் ராவத், அவ­ரது மனைவி மது­லிகா ராவத் உள்­பட 14 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

இந்­நி­லை­யில், பிபின் ராவத்­தின் தீரத்­தைப் போற்­றும் வகை­யில், 120 கிலோ எடை­ கொண்ட அவ­ரது மார்­ப­ளவு ஐம்­பொன் சிலை டெல்­லி­யில் உள்ள ராணு­வப் போர் நினை­விடத்தில் பிர­த­மர் மோடி முன்னிலையில் நிறுவ உள்­ள­தாக முன்­னாள் ராணு­வத்­தி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

கும்­ப­கோ­ணத்தில் உள்ள சிற்­பக் கூடத்­தில் முதல்கட்­ட­மாக களி­மண்­ணாலும் அதன்பின்னர் தங்­கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் ஆகிய ஐம்­பொன்­னைக் ெகாண்டும் அவ­ரது சிலையை வடிவமைக்க உள்ளனர். பிப்ரவரி 2வது வாரத்தில் இப்பணிகள் நிறைவுபெறும்.