பிப்ரவரி 3 வரை ஹரி நாடாரை சிறையில் அடைக்க உத்தரவு

பிப்ரவரி 3 வரை ஹரி நாடாரை சிறையில் அடைக்க உத்தரவு

1 mins read
88d0ac5e-4755-482b-b2c9-efc5b2e8cec3
'பிரெண்ட்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை விஜய லட்சுமி. படங்கள்: ஊடகம் -
multi-img1 of 2

சென்னை: தனது உயி­ருக்கு மிரட்­டல் விடுத்­த­தாக நடிகை விஜ­ய­லட்­சுமி அளித்த புகா­ரைத் தொடர்ந்து, பனங்­காட்டு படை கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஹரி­நா­டாரை கைது செய்து, சைதாப்­பேட்டை குற்­ற­வியல் நீதி­மன்­றத்­தில் காவல்­துறை அதி­கா­ரி­கள் முன்னிலைப்­ப­டுத்­தி­னர்.

அவரை பிப்­ர­வரி 3ஆம் ேததி வரை நீதி­மன்­றக் காவ­லில் வைக்க நீதி­பதி சுப்­பி­ர­ம­ணி­யன் உத்­தர விட்­டதை அடுத்து, பூந்­த­மல்லி கிளைச் சிறை­யில் அவர் அடைக்­கப்­பட்­டார்.

கடந்த 2020ஆம் ஆண்டு, நாம் தமி­ழர் கட்­சி­யின் ஒருங்கிணைப்­பா­ளர் சீமா­னுக்கு ஆத­ர­வ­ளிக்­கும் வகை­யில், ஹரி­நா­டார் தனது உயி­ருக்கு மிரட்­டல் விடுக்கும் வகையில் பேசி வருவதாக திரு­வான்­மி­யூர் காவல்­நி­லை­யத்­தில் நடிகை விஜய லட்­சுமி, 42, புகார் அளித்­தார்.

திரு­நெல்­வேலி மாவட்­டம், இலந்­தைக்­கு­ளம் கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் ஹரி நாடார், 48.

பண மோசடி வழக்­குத் தொடர்­பில் கைதாகி, கர்­நா­டக மாநி­லம், பரப்­பன அக்­ர­ஹாரா சிறை­யில் அடைக்­கப்­பட்­டி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், ஹரி நாடாரை விசா­ர­ணைக்­காக தமி­ழ­கம் அழைத்து வந்த காவல்­துறை அதி­கா­ரி­கள் அவரை நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்தி சிறை­யில் அடைத்­த­னர்.