மாப்பிள்ளை அறைந்ததால் மணமகனை மாற்றிய மணமகள்

மாப்பிள்ளை அறைந்ததால் மணமகனை மாற்றிய மணமகள்

1 mins read
204b47be-a015-4901-97f0-b2a116dee8e5
-

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருமண வரவேற்பின்போது மணமகள் நடனமாடிக் கொண்டே வந்தார். இதனை சற்றும் விரும்பாத மணமகன் மண மகளை ஓங்கி அறைந்ததால், மணமகள் தனது முறை மாப்பிள்ளையை நேற்று காலை திருமணம் செய்துகொண்டார்.

நேற்று முன்தினம் இரவு பெண் அழைப்பின்போது மணமகள் தனது உறவினர் களுடன் நடனமாடிக் கொண்டு திருமண மண்டபத்திற்கு வந்தபோது, மணமகளை மணமகன் அறைந்ததால் மணமகன் மாறிப்போனார்.