‘தமிழை ஆட்சி மொழியாக உயர்த்த குரல் கொடுப்போம்’

சென்னை: சென்னை அண்ணா நூற்­றாண்டு நூல­கத்­தில் நேற்று நடை­பெற்ற 'கலை­ஞர் கரு­ணா­நிதி தமிழ் செம்­மொழி விருது' வழங்­கும் நிகழ்வில், தமிழறிஞர்கள் 10 பேருக்கு முதல்­வர் மு.க.ஸ்டா­லின் விருதுகள் வழங்கிச் சிறப்பித்தார்.

கடந்த 2010 முதல் 2019ஆம் ஆண்­டு­வ­ரை­யில் விருது பெறத் தேர்­வா­ன­வர்­க­ளுக்கு தலா பத்து லட்­சம் ரூபாய் ஊக்­கத்­தொ­கை­யும் பாரட்­டுச்­ சான்­றி­த­ழு­டன் கலை ஞரின் சிலை­யும் வழங்­கப்­பட்­டது.

தொடர்ந்து பேசிய முதல்­வர், தமிழை ஆட்சி மொழி­யாக உயர்த்­து­வ­தற்கு குரல் கொடுப்­போம் என்­றார்.

தொன்­மை­யான மொழி­யான தமிழ், தமி­ழர்­க­ளின் பண்­பாட்டு அடை­யா­ள­மா­கத் திகழ்­வ­தா­க­வும் தமிழ் என்­றாலே இனி­மை­தான் என­வும் புக­ழா­ரம் சூட்­டி­னார்.

தமிழ் எந்த மொழி­யில் இருந்­தும் கடன் வாங்கி உரு­வான கிளை மொழி அல்ல என்­பதைச் சுட்­டிக்­காட்­டிய முதல்வர், தமி­ழில் இருந்துதான் பல மொழி­கள் உரு­வா­கி­யி­ருப்­ப­தாகவும் குறிப்­பிட்­டார்.

பண்­பாட்­டின் அடை­யா­ள­மாக இருக்­கும் தமிழ்மொழியை பேசும்­போது இனி­மை­யாக உள்ளதாகவும் தமிழ் மொழி நமக்கு பெருமை தரு­வ­தா­க­வும் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!