திருமணத்தை நிறுத்திய மணப்பெண்; ரூ.7 லட்சம் இழப்பீடு கேட்கும் மணமகன்

பண்­ருட்டி: கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் நடக்க இருந்த திருமணத்தின்போது, மணமகள் உற­வி­ன­ரு­டன் நட­ன­மா­டி­யதைக் கண்டித்து மண­ம­கன் அறைந்ததால் திரு­ம­ணம் நின்றுபோனது.

இதைத்ெதாடர்ந்து, மணப்­பெண் தனது உற­வுக்­கா­ரர் ஒரு­வரை திரு­ம­ணம் செய்­து­கொண்­டார்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து பண்­ருட்டி மக­ளிர் காவல் நிலை­யத்­தில் புகார் அளித்­துள்­ளார் மணமகன் ஸ்ரீதர், 28.

மணப்பெண்ணால் தனக்கு ரூ.7 லட்­சம் வரை நஷ்­டம் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் தன்னை ஏமாற்­றி­ய­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்கும்படியும் திரு­ம­ணத்­திற்கு ஏற்­பட்ட செலவுத்­ தொ­கையை இழப்­பீ­டாக பெண் வீட்டாரிடம் பெற்றுத் தரும்படியும் ­மண­ம­கன் ஸ்ரீதர் புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

"எனக்­கும் ஜெய­சந்­தி­யா­விற்­கும், 23, கடந்த ஆண்டு நவம்­பர் 6ல் நிச்­ச­யதார்த்தம் நடந்­தது. அதன்பிறகு நானும் ஜெய­சந்­தி­யா­வும் கைபேசியில் பேசிப் பழகி வந்­தோம். இம்­மா­தம் 20ஆம் தேதி திரு­ம­ணம் நடக்க இருந்த நிலையில், 19ஆம் தேதி இரவு பெண் அழைப்பு நிகழ்ச்­சி­யின்­போது, பாடல்­க­ளுக்கு ஜெய­சந்­தி­யா­ நடனமாடி­னார். அவ­ரது கையைப் பிடித்துக்கொண்டு ஒரு­வர் ஆடி­னார்.

"ஏன் மற்­ற­வர்­க­ளு­டன் நட­னம் ஆடி இப்­படி எல்­லாம் நடந்துகொள்­கி­றாய்,' என ஜெயசந்தியாவிடம் கேட்­டேன். 'அப்­படித்தான் ஆடு­வேன்,' என்று கூறி திருமணத்தை நிறுத்திவிட்டார். இத­னால் என் குடும்­பத்­தி­னர், உற­வி­னர்­கள் மன உளைச்­ச­லில் உள்­ள­னர். எனது ரூ.7 லட்சத்தை திருப்பித் தரவேண்டும்," என புகார் மனுவில் கூறியுள்ளார்.

திருமண நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை எனக்கு ரூ.7 லட்சம் செலவாகி உள்ளது. பெண் என்னைத் திருமணம் செய்துெகாள்ளாமல் கைகழுவி விட்டுள்ளார். எனது வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. பெண் குடும்பத்தார் எனது செலவுத் தொகையை நஷ்டஈடாகத் திருப்பித் தரவேண்டும்.

மணமகன் ஸ்ரீதர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!