‘இல்லம் தேடி நூலகம்’: ஆசிரியர் முயற்சிக்கு வரவேற்பு

ஆனை­மலை: அரசு உயர்­நி­லைப்­பள்ளி ஆசி­ரி­யர் ஒரு­வர், ‘இல்­லம் தேடி நூலகம்’ எனும் திட்­டத்தைச் செயல்படுத்தி வருகிறார். அவர், மாண­வர்­க­ளின் வீடு­க­ளுக்கே நேரில் சென்று புத்­த­கங்­களை விநி யோகித்து, அவர்­க­ளது வாசிப்புப் பழக்­கத்தை ஊக்­கு­வித்து வரு­கிறார். ஆசி­ரி­ய­ரின் இம்முயற்சியைப் பல­ரும் வர­வேற்­றுள்­ள­னர்.

கோவை மாவட்டம், ஆனை­மலை அரு­கே­யுள்ள பெத்­த­நா­யக்­க­னூர் அரசு உயர்­நி­லைப்­பள்­ளி­யில் தமிழா சி­ரி­ய­ரா­கப் பணி­யாற்றி வருகிறார் பால­மு­ரு­கன், 45.

தமி­ழக அர­சின் நல்­லா­சி­ரி­யர் விரு­தைப் பெற்­றுள்ள இவர், வீட்டில் உள்ள மாண­வர்­கள் தங்­க­ளது நேரத்தைப் பய­னுள்­ள­ வழியில் செலவழிக்கவும் பல தக­வல்­களைத் தெரிந்­து­கொள்­ள­வும் ‘இல்­லம் தேடி நூலகம்’ திட்­டத்­தைத் தொடங்கி, மாண­வர்­க­ளுக்குப் புத்­த­கங்­களை வழங்­கி வருகிறார்.

இதுகுறித்து பாலமுருகன் கூறுகையில், “மாண­வர்­களின் வாழ்க்கை வள­மா­க அமைய சிந்­த­னைத் ­தி­றன், வாசித்­தல் திறன் அவ­சி­யம். இதனைக் கருத்­தில் கொண்டு அர­சின் ‘இல்­லம் தேடி கல்வி’ திட்­டத்தைப் போல் ‘இல்­லம் தேடி நூலகம்’ திட்­டத்தை உரு­வாக்­கி­னேன். சேக­ரிக்­கப்­பட்ட நுால்கள், பள்ளி நூலகத்­தி­லுள்ள புத்­த­கங்­களை மாண­வர்­க­ளின் வீடு­க­ளுக்கே இரு சக்கர வாகனத்தில் சென்று வழங்­கு­கி­றேன். மாண­வர்­கள் தங்­கள் விருப்­பத்­துக்கு ஏற்ப புத்­த­கங்­களைத் தேர்வு செய்து வாசிக்­கின்­ற­னர்,” என்றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!