கோவையைக் கலக்கிய முத்துக் கருப்பு; தங்க நாணயம் பரிசு

கோவை: கோவை­யில் நடந்த ஜல்­லிக்­கட்­டுப் போட்­டி­யில் யோக­தர்ஷினி என்ற 16 வயது சிறு­மி­யின் முத்­துக் கருப்பு காளை 529வது மாடாக களம் இறங்­கி­யது. மாடு­பிடி வீரர்­கள் காளையை அடக்­கத் தயா­ராக நிற்க, வாடி­வா­சல் வழியே சீறிப் பாய்ந்­தது வட­மு­கத்து கருப்பு.

யாருக்­கும் சிக்­கா­மல் ஜல்­லிக்­கட்டு களத்­தில் வெறித்­துக்­கொண்டு ஓடி­ய­தால், மாடு வெற்றிபெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்டு, யோக­தர்­ஷி­னிக்கு சில்­வர் அண்­டா­வும் சாப்­பாட்டை சூடாக வைத்­தி­ருக்­கும் பாத்­தி­ர­மும் பரி­சாக வழங்கப்­பட்­டன.

கருப்பு களத்­தில் நின்று அதிக நேரம் விளை­யா­டா­விட்­டா­லும் யோக­தர்­ஷி­னியை ஊக்­கு­விக்­கும் வகை­யில், சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சார்­பில் அமைச்­சர் செந்­தில் பாலாஜி தங்க நாண­யத்­தைப் பரி­சாக வழங்­கி­னார்.

கடந்த வாரம் நடந்த அவ­னியா­பு­ரம் ஜல்­லிக்­கட்டு போட்­டி­யில் யோக­தர்­ஷி­னி­யின் காளை பிடி­மா­டாகப் போனது. இதையடுத்து, அவ­ரது ஆர்­வத்தை ஊக்­கு­விக்­கும்வித­மாக, வணி­க­வ­ரித்­துறை அமைச்­சர் மூர்த்தி, யோக­தர்­ஷி­னி யைப் பரிசு வாங்­கிச் செல்­லும்­படி ஒலிபெருக்கியில் அழைத்தார். ஆனா­லும், பரி­சை வாங்­கா­மல் சென்றுவிட்­டார் யோக­தர்­ஷினி.

"வெற்­றி­பெ­றாத மாடு­க­ளுக்கு எப்­போ­தும் பரிசு தரமாட்­டார்­கள். ஆனால், பெண் பிள்­ளை­யாக மாட்­டைக் கட்­ட­விழ்க்­கி­றேன் என்று என்னை ஊக்­கு­விக்க பரிசு தந்தார்­கள். எல்­லா­ருக்­கும் உள்ள விதி­மு­றை­தான் எனக்­கும். என் காளை வெற்­றி­பெ­றும்­போது நான் பரிசு வாங்­கிக்­கொள்­கி­றேன்," என்று பரிசை மறுத்­த­தன் கார­ணத்­தைச் சொன்னார் யோக­தர்­ஷினி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!