'பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்'

'பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்'

1 mins read
86cb5e0a-29e7-43e5-a6a3-589c4980779d
-

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் திமுக தலைமை நிலையச் செயலாளா் பூச்சி முருகனின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியபோது, "இவ்விழாவுக்கு வந்துள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயரைச் சூட்டுங்கள் என்பதுதான் அது. உங்கள் பெயர் தமிழ்ப் பெயரா என்று என்னைப் பாா்த்து நீங்கள் கேட்கலாம். அது ஒரு காரணப் பெயா்.

"ரஷ்யத் தலைவா் ஸ்டாலின் இறந்த நேரத்தில் நான் பிறந்த காரணத்தால் அவருடைய நினைவாக இப்பெயரை எனக்குச் சூட்டினாா்கள்.

முதலில் எனக்கு அய்யாதுரை என்றுதான் பெயா் சூட்ட நினைத்தாா்கள். அய்யா என்றால் பெரியாா். 'துரை' என்றால், அண்ணாவின் பெயருக்குப் பின்னால் வரும் துரை என்று சோ்த்து வைக்க வேண்டும் என்று கருணாநிதி நினைத்திருந்தாா்," என்றாா்.