மீனவர்கள் மீது இலங்கை கொள்ளையர்கள் தாக்குதல்

வேதா­ரண்­யம்: வேதா­ரண்­யம் அருகே நாட்­டுப் பட­கில் மீன்­பி­டித்­துக்கொண்­டி­ருந்த மூன்று மீன­வர்­கள் மீது இலங்கை கடற்­கொள்­ள­யைர்­கள் தாக்­கு­தல் நடத்­தி­னர்.

நாகை மாவட்­டம், வேதா­ரண்­யத்தை அடுத்த புஷ்­ப­வ­னம் மீனவ கிரா­மத்­தைச் சேர்ந்த நாக­முத்து (44), பன்­னீர்­செல்­வம் (48), ராஜேந்­தி­ரன் (54) ஆகிய மூன்று மீன­வர்­களும் நேற்று அதி­காலையில் கோடி­யக்­கரை­யில் மீன்பிடித்­துக் கொண்­டி­ருந்­த­னர்.

அப்­போது அங்கு பட­கில் வந்த இலங்கை கடற்­கொள்­ளை­யர்­கள், தமி­ழக மீன­வர்­களை ரப்­பர் கட்டை, இரும்­புக் கம்பி போன்ற ஆயு­தங்­களால் தாக்கி அவர்­களை கட­லுக்­குள் தூக்கி வீசி­னர். தமி­ழக மீன­வர்­க­ளின் பட­கில் இருந்த 200 கிலோ மீன்­பிடி வலை, மீன்­கள், ஜிபிஎஸ் கருவி, கைபேசி, டீசல் போன்­ற­வற்றையும் அவர்கள் கொள்ளையடித்­துச் சென்­ற­னர்.

மீன­வர்­கள் வேதா­ரண்­யம் அரசு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

இதுகுறித்து வேதா­ரண்­யம் கட­லோரக் காவல் துறையினர் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

இலங்கை கடற்­கொள்­ளை­யர்­க­ளின் அட்­டூ­ழி­யத்­துக்கு முற்­றுப்­புள்ளி வைக்கவேண்­டும் என்று தமி­ழக மீன­வர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!