பந்தலூர்: இந்தக் கொரோனா காலகட்டத்தில் வீட்டுக்குள் முடங்கிவிடாமல், பந்தலுார் அருகே உள்ள அய்யன்கொல்லியில் இரு சிறுவர்கள் 'யுனி', 'லுனி' மிதி வண்டிகளை ஓட்டி அசத்துகின்றனர்.
மலைப்பகுதி மாவட்டமான நீல கிரியில் சாதாரண மிதிவண்டியை ஓட்டுவதே சிரமம். ஆனால், அய்யன்கொல்லி பகுதியைச் சேர்ந்த பேபி, லிண்டா தம்பதியின் குழந்தை கள் பரத்ரோசன், 12, வைகா, 9, ஆகியோர் ஒற்றை சக்கரமான 'யுனி', 'லுனி' மிதிவண்டிகளை ஓட்டி வியக்க வைக்கின்றனர்.
தனது பிள்ளைகள் கைபேசியில் விளையாடுவதைத் தடுக்க, அவர்க ளின் தந்தை பேபி இணையத்தில் தேடி மேலை நாடுகளில் பிரபலமாக விளங்கும் மிதிவண்டிப் பயிற்சியை அளிக்க முடிவு செய்தார். தமிழகத்தில் இதுபோன்ற மிதிவண்டிகள் இல்லாத நிலையில், அவற்றை தானே வடிவ மைத்து, பயிற்சி அளித்தார்.
ஒரே வாரத்தில் பயிற்சியை நிறைவு செய்த குழந்தைகள், 8 கி.மீ. துாரத்தை எளிதாக ஓட்டிச் சென்று, தங்களது திறமையை வெளிக்காட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.
"இருக்கை, ஒரு சக்கரம், 'பெடல்' கொண்டது 'யுனி' மிதிவண்டி. ஒரு சக்கரத்துடன் இருக்கை இல்லாதது 'லுனி'. இவற்றை கால்களின் நிலைப் பாட்டால் மட்டுமே ஓட்டமுடியும். இது போன்று குழந்தைகளின் தனித்திறன் களை வளர்க்க பெற்றோர் முன்வருவது அவசியம்,'' என்றார் தந்தை பேபி.

