தஞ்சாவூர்: தஞ்சை மாணவி தனது உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.
பல்வேறு அமைப்புகளும் குற்றம்சாட்டுவதுபோல், விசாரணையின்போது யாரும் மதமாற்ற குற்றச்சாட்டை சொல்லவில்லை.
எனினும், இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இப்பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமும் தற்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் சொன்னார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. காரணம் எதுவாக இருந்தாலும் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தங்களது தண்டனையில் இருந்து தப்பமுடியாது. காவல்துறை விசாரணை மட்டுமின்றி பள்ளிக் கல்வித் துறை சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
"பள்ளிகளில் மதம், இனம் என எந்த ஒரு பாகுபாடும் இருக்கக்கூடாது எனவும் அவ்வாறு இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," எனவும் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, மாணவியின் தந்தையும் அவரது இரண்டாவது மனைவியும் தஞ்சாவூர் ஒருங் கிணைந்த நீதிமன்றத்துக்குள் சென்றதும் நுழைவாயில் மூடப் பட்டது. வழக்கறிஞர்கள், பத்திரி கையாளர்கள் உள்ளிட்ட யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தஞ்சாவூர் நீதித்துறையின் நடுவர் பாரதி முன்னிலையில் பெற்றோர் இருவரும் தனித்தனி யாக முன்னிலையாகி தங்களது வாக்குமூலத்தை அளித்தனர். இரண்டரை மணி நேரம் காெணாளியாகப் பதிவான வாக்குமூலம் முத்திரையிடப்பட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒப்படைக்கப்பட்டது.

