தொற்று குறைவது தொடர்ந்தால் ஊரடங்கு ரத்து; உயிரிழப்பு 10 மடங்கு குறைவு ஐஐடி: மூன்றாவது அலை இரு வாரங்களில் உச்சம் அடையும்

தொற்று குறைவது தொடர்ந்தால் ஊரடங்கு ரத்து; உயிரிழப்பு 10 மடங்கு குறைவு ஐஐடி: மூன்றாவது அலை இரு வாரங்களில் உச்சம் அடையும்

2 mins read
6c564a58-b7e8-4269-b81e-84e76dfc6fa5
-

சென்னை: கொரோனா தொற்­றுப் பர­வ­லின் மூன்­றா­வது அலை அடுத்த இரு வாரங்­களில் உச்­சம் அடை­யும் என்று சென்­னை­யில் உள்ள இந்­திய தொழில்­நுட்­பக் கழ­கம் (ஐஐடி) கூறி­யுள்­ளது.

இந்­தி­யா­வில் டெல்டா, ஓமிக்­ரான் வகை கிரு­மிப் பர­வ­லால் மூன்­றா­வது அலை தீவி­ர­ம­டைந்து வரு­கிறது.

இந்த அலை எப்­போது உச்­சம் அடை­யும் என்­பது தொடர்­பாக சென்னை ஐஐ­டி­யின் கணி­த­வி­யல் துறை­யும் தரவு அறி­வி­யல் சிறப்பு மைய­மும் கணித அடிப்­ப­டை­யில் பகுப்­பாய்வு செய்து விவ­ரம் வெளி யிட்­டுள்­ளன.

தற்­போது, 'ஆர் வேல்யூ' என்று சொல்­லப்­ப­டும் கொரோனா மொத்த பர­வல் விகி­தம் 1.57% விழுக்காடாக இருப்பதாகவும் அதே­போல் அனைத்து மாநி­லங்­க­ளி­லும் இருந்து பெறப்­பட்ட பர­வல் விகித தர­வு­க­ளும் 'ஆர் வேல்யூ' உச்­ச­மடை­யும் என்­ப­தையே உணர்த்து­வ­தா­க­வும் ஐஐடி குறிப்­பிட்­டுள்­ளது.

தங்­க­ளது கணக்­கீட்­டின்­படி, கொரோனா தொற்று பிப்­ர­வரி 6 ஆம் தேதிக்குள் உச்­சமடை­யும் என்றும் கூறியுள்ளது.

இதுகுறித்து, சென்னை ஐஐடி கணி­தத்­துறை பேரா­சி­ரி­யர் டாக்­டர் ஜெயந்த் ஜா கூறுகையில், ''மும்பை, டெல்லி மாந­க­ரங்­களில் ஒரு கொரோனா நோயாளி மற்­ற­வர்­க­ளுக்கு தொற்­றைப் பரப்­பும் விகி­த­மா­னது அங்கு கொரோனா உச்­ச­ம­டைந்து சமூ­கப் பர­வ­லாகி வரு­வ­தைக் காட்­டு­கிறது. அதே­நே­ரத்­தில் சென்­னை­யில் இது இன்­னும் 1க்கு அரு­கிலேயே உள்­ளது,'' என்று தெரிவித்துள்ளார்.

பரவலாக குறைந்தால்தான் பயன்

இதற்­கி­டையே, "மாநிலத்தில் கிருமிப் பரவலால் பாதிக்கப்படு வோர் எண்­ணிக்கை குறைந்து வருகிறது. இப்பாதிப்பு மாநிலம் முழுவதும் மேலும் குறையத் தொடங்கினால், இனி ஞாயி­றன்று முழு ஊர­டங்குக்கு தேவை இருக் காது. அதனை ரத்து செய்ய நட­வடிக்கை எடுக்­கப்­படும்," என்­று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சற்று குறைந்த பாதிப்பு

தமி­ழ­கத்­தில் கடந்த 24 மணி நேரத்தில் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இது இதற்கு முந்தைய தினத்தில் இருந்த 30,744 என்ற எண்ணிக்கையைக் காட்டி லும் சற்று குறைவாகும்.

கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்­தில் 40 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். இத­னால் மொத்த உயி­ரி­ழப்பு 37,218 ஆக உயர்ந்­துள்­ளது. மூன்­றா­வது அலை­ வேக­மாக உச்­சம் தொட்ட சென்­னை­யில் மேலும் 6,383 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது என்று சுகா­தா­ரத்­துறை தெரிவித் துள்ளது.

"தமி­ழ­கத்­தில் மூன்றாம் அலை பாதிப்பு தற்­போது குறைந்து வரு­வதுடன் உயி­ரி­ழப்பும் தற்போது 10 மடங்கு குறைந்­துள்­ள­து," என சுகாதாரச் செயலாளர் டாக்டா் ஜெ.ராதா­கி­ருஷ்­ணன் கூறியுள்ளார்.