நாளை குடியரசு தின விழா; இறுதிக் கட்ட ஒத்திகை

நாளை குடியரசு தின விழா; இறுதிக் கட்ட ஒத்திகை

1 mins read
52a1cc1a-8804-4c78-a36b-83a01a9c2d26
-

73வது குடியரசு தின விழா நாடு முழுவதும் நாளை 26ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, தமிழக காவல்துறையினர் நேற்று குதிரைகளில் இறுதிக்கட்ட அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டனர். கொரோனா காரணமாக இவ்வாண்டின் குடியரசு தின விழாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள சாலையில் டிஜிபி அலுவலகம் எதிரே குடியரசு தின விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை காலை 8 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இதையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வீரதீர செயல்களைப் புரிந்தவர்களுக்குப் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்க உள்ளார். ஒவ்வோர் ஆண்டும் மெரினா கடற்கரையில் ஒரு மணி நேரம் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை இவ்வாண்டு 35 நிமிட நேரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இடம்பெற உள்ளன. இந்த அலங்கார ஊர்தியில் சுதேசி கப்பல், வேலூர் கோட்டை, வள்ளுவர் கோட்டத் தேர், காளையார் கோவில் உள்ளிட்ட மாதிரிகளும் இடம்பெற உள்ளன. படம்: இபிஏ