33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்தது

33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்தது

1 mins read
94bb48a5-aa49-4c0f-a8ff-2b1fefbea6f6
-

சென்னை: தமி­ழ­கத்­தில் நேற்று முன்­தி­னம் 33 மாவட்­டங்­களில் அன்­றா­டத் தொற்று எண்­ணிக்கை குறை­வா­கப் பதி­வாகி உள்­ளது.

செவ்­வாய்க்­கி­ழமை புதி­தாக 30,055 பேருக்கு கிருமி தொற்­றி­ய­தாக சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது. கடந்த வாரம் 30 மாவட்­டங்­களில் தொற்று பாதிப்பு அதி­க­ரித்த நிலை­யில் இப்­போது அது குறைந்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் அதி­க­பட்­ச­மாக சென்­னை­யில் 6,241 பேரும் செங்­கல்­பட்­டில் 1,737 பேரும் கோவை­யில் 3,763 பேரும் கன்­னி­யா­கு­ம­ரி­யில் 1,217 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

வெளி­நா­டு­களில் இருந்து தமி­ழ­கம் வந்த நால்­வ­ருக்­கும் வெளி­மா­நி­லங்­களில் இருந்து வந்த 12 பேருக்­கும் தொற்­றுப் பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. மேலும், 12 வய­துக்­குட்­பட்ட 1,012 சிறார்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் செவ்­வாய்க்­கி­ழமை நில­வ­ரப்­படி 10,088 பேர் மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தில் கொரோனா, ஓமிக்­ரான் பாதிப்பு கார­ண­மாக ஏற்­படும் உயி­ரி­ழப்­பு­கள் குறை­வாக உள்­ள­தாக அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் கூறியுள்ளார்.