தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேருக்கு பத்ம விருதுகள்

சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா, பிபின் ராவத் உட்பட 128 பேர் விருது பெறுகின்றனர்

சென்னை: தமி­ழ­கத்­தைச் சேர்ந்த ஏழு பேர் உட்­பட நூற்­றுக்­கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு மத்­திய அரசு பத்ம விரு­து­களை அறி­வித்­துள்­ளது.

கூகல் நிறு­வ­னத்­தின் தலை­மைச் செய­ல­தி­காரி சுந்­தர் பிச்சை, மறைந்த முப்­ப­டைத் தள­வதி பிபின் ராவத், மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயலதிகாரி சத்ய நாதெல்லா, நீரஜ் சோப்ரா, பழம்­பெ­ரும் நடிகை சௌகார் ஜானகி, காங்கிரஸ் மூத்தத தலைவர் குலாம்நபி ஆசாத் ஆகி­யோ­ருக்கு விரு­து­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மொத்­தம் 128 பேர் கொண்ட விரு­துப்­பட்­டி­ய­லில் அதி­க­பட்­ச­மாக உத்­த­ரப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த 13 பேர் இடம்­பெற்­றுள்­ள­னர்.

தமி­ழ­கத்­தைச் சேர்ந்த சதி­ராட்­டக் கலை­ஞர் முத்து கண்­ணம்­மாள், இசைக்­க­லை­ஞர் ஏ.கே.சி.நட­ரா­ஜன், கவி­ஞர் சிற்பி பால­சுப்­பி­ர­ம­ணி­யம், பழம்­பெ­ரும் நடிகை சௌகார் ஜானகி, நீரி­ழிவு நோய் மருத்­துவ நிபு­ணர் வீராச்­சாமி சேஷய்யா, டாடா குழு­மத்­தின் தலை­மைச் செய­ல­தி­காரி நட­ரா­ஜன் சந்­தி­ர­சே­க­ரன், கிரா­மப்­பு­றப் பெண்­கள், சிறார்­க­ளின் மேம்­பாட்­டுக்­காக உழைத்து வரும் எஸ்.தாமோ­த­ரன் உள்­ளிட்­டோ­ருக்கு பத்ம விரு­து­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

இவர்­களில் சுந்­தர் பிச்­சைக்­கும் எஸ்.தாமோ­த­ர­னுக்­கும் பத்ம பூஷண் விரு­தும் மற்ற அனை­வ­ருக்­கும் பத்ம ஸ்ரீ விரு­தும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பல்­வேறு துறை­களில் சாதனை படைத்த, சிறப்­பாக செயல்­ப­டு­ப­வர்­க­ளுக்கு மத்­திய அரசு ஆண்­டு­தோ­றும் பத்ம விரு­து­கள் அளித்து கௌர­வித்து வரு­கிறது. பத்ம விபூ­ஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ என பல்­வேறு பத்ம விரு­து­கள் அளிக்­கப்­ப­டு­கின்­றன.

ஆண்­டு­தோ­றும் குடி­ய­ரசு தின விழா­வின்­போது இந்த விரு­து­க­ளைப் பெறு­வோர் அறி­விக்­கப்­ப­டு­வர்.

இதற்­கி­டையே, மத்­திய அரசு அறி­வித்த பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்­துள்­ளார் மேற்கு வங்க மாநில முன்­னாள் முதல்­வர் புத்­த­தேவ் பட்­டாச்­சார்யா. அவ­ருக்கு விருது அறி­விக்­கப்­பட்ட சில நிமி­டங்­க­ளி­லேயே அதை ஏற்­கப் போவ­தில்லை என அவர் தெரி­வித்­தார்.

இதே போல் மேற்கு வங்க மாநில பின்­ன­ணிப் பாடகி சந்­தியா முகர்­ஜி­யும் தமக்கு அறி­விக்­கப்­பட்ட பத்­ம­ஸ்ரீ விருதை ஏற்க மறுத்­துள்­ளார்.

90 வய­தில் விருது வழங்­கப்­படுவது தம்மை அவ­ம­திப்­பது போல் இருப்­ப­தாக அவர் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!