குடியரசு தின விழா: சாதனையாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்

குடியரசு தின விழா: சாதனையாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்

2 mins read
d3b41892-30e7-481f-bbd6-c1151e63e131
கடந்த ஆண்டு சென்னையில் உள்ள ஒரு கல்லறைத் தோட்டத்தில் பணியாற்றும் இளையர் ஒருவர் மயங்கி விழுந்து உயிருக்குப் போராடிய நிலையில், அங்கு வந்த ஆய்வாளர் ராஜேஸ்வரி, அவரை தன் தோளில் தூக்கிச் சென்று அவ்வழியே வந்த ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி உயிரைக் காப்பாற்றினார். அவருக்கு நேற்று அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் குடி­ய­ரசு தின­விழா நேற்று சிறப்­பாக கொண்­டா­டப்­பட்­டது.

சென்னை மெரினா கடற்­க­ரை­யில் ஆளு­நர் ஆர்.என்.ரவி தேசி­யக் கொடியை ஏற்றி வைத்து மரி­யாதை செலுத்­தி­னார். அப்­போது விமா­னப்­படை ஹெலி­காப்­டர் மூலம் மலர்­கள் தூவப்­பட்­டன. இதை­ய­டுத்து, முப்­ப­டை­கள், காவல் துறை­யின் அணி­வ­குப்பு மரி­யா­தையை அவர் ஏற்­றுக்கொண்­டார்.

இதை­ய­டுத்து, உரை­யாற்­றிய ஆளு­நர் ஆர்.என்.ரவி, இந்­தியா தனது சுதந்­திர நூற்­றாண்டு விழா­வைக் கொண்­டா­டும்­போது உல­கத்­துக்குத் தலைமை ஏற்­கும் நாடாக உரு­வாகி இருக்க வேண்­டும் என்று குறிப்­பிட்­டார்.

டெல்லி குடி­ய­ரசு தின அணி வகுப்­பில் தமி­ழக அலங்­கார ஊர்தி பங்­கேற்க அனு­மதி மறுக்­கப்­பட்ட நிலை­யில், அந்த ஊர்தி நேற்று சென்­னை­யில் நடந்த அணி­வ­குப்­பில் இடம்­பெற்­றது.

குடி­ய­ரசு தினத்­தை­யொட்டி, சென்னை கடற்­கரை சாலை­யில் ஐந்து அடுக்கு பாது­காப்பு போடப்­பட்­டி­ருந்­தது. கொரோனா நெருக்­கடி கார­ண­மாக இந்த ஆண்டு பொது­மக்­கள் இவ்­வி­ழா­வில் பங்­கேற்க அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. மேலும், பள்ளி, கல்­லூரி மாண­வர்­க­ளின் கலை நிகழ்ச்­சி­களும் இடம்­பெ­ற­வில்லை.

நேற்­றைய விழா­வில் பல்­வேறு துறை­களில் சிறப்­பா­கச் செயல்­பட்­ட­வர்­க­ளுக்கு அண்ணா பதக்­கம், உத்­த­மர் காந்­தி­ய­டி­கள் காவ­லர் பதக்­கம், திருந்­திய நெல் சாகு­ப­டிக்­கான வேளாண்­மைத்­துறை சிறப்பு விருது ஆகி­ய­வற்றை முதல்­வர் மு.க.ஸ்டா­லின் வழங்­கி­னார்.

இதை­ய­டுத்து, பல்­வேறு அர­சுத் துறை­க­ளின் சார்­பில் அலங்­கார ஊர்­தி­க­ளின் அணி­வ­குப்பு நடை­பெற்­றது. வீர­தீ­ரச் செயல் புரிந்த சாதனை­யா­ளர்­க­ளுக்கு முதல்­வர் மு.க.ஸ்டா­லின் விருது வழங்கி சிறப்­பித்­தார்.

உயி­ருக்­குப் போரா­டி­ய­வரை தன் தோளில் தூக்­கிச் சென்று காப்­பாற்ற நட­வ­டிக்கை எடுத்த காவல்­துறை ஆய்­வா­ளர் ராஜேஸ்­வ­ரிக்கு அண்ணா விருது அளிக்­கப்­பட்­டது.

திருப்­பூ­ரில் நீரில் மூழ்­கிய சிறு­மி­க­ளைக் காப்­பாற்­றிய சொக்­க­நா­தன், சுதா உள்­ளிட்­டோ­ருக்கு வீர­தீ­ரச் செயல்­க­ளுக்­காக அண்ணா பதக்­கத்­து­டன் ரூ.1 லட்­சம் காசோ­லை­யும் வழங்­கப்­பட்­டது.

திருச்சி மணப்­பாறை அருகே நீரில் மூழ்­கிய சிறு­மியைக் காப்பாற்­றிய சிறு­வன் லோகித்­துக்­கும் விருது வழங்கி சிறப்­பித்­தார் முதல்­வர்.

வெள்ளத்தில் சிக்கியோரை மீட்ட ராஜீவ் காந்தி, தனியரசு, உதவி மருத்துவர் அசோகன், கார் ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் ஆகியோரும் விருதுகள் பெற்றனர்.