மதுரை ஆவின் நிறுவனத்தில் மீண்டும் அதிரடிச் சோதனை

மதுரை ஆவின் நிறுவனத்தில் மீண்டும் அதிரடிச் சோதனை

1 mins read
c59bb7c2-d93c-4790-bf7b-697d486ceeaa
-

மது­ரை: ஆவின் நிறு­வன முறை­கேடு தொடர்­பாக லஞ்ச ஒழிப்­புத்­து­றை­யி­னர் மது­ரை­யில் உள்ள ஆவின் நிறு­வ­னத்­தில் அதி­ர­டிச் சோதனை நடத்­தி­னர்.

கடந்த இரு தினங்­க­ளாக நடை­பெற்ற இந்த சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது, பல்­வேறு முக்­கிய ஆவ­ணங்­கள் கைப்­பற்­றப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது.

இத­னால் முன்­னாள் பால்­வளத்­துறை அமைச்­சர் ராஜேந்­திர பாலா­ஜிக்கு மேலும் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

பண மோசடி தொடர்­பான வழக்கை எதிர்­கொண்­டுள்ள அவர், சில தினங்­க­ளுக்கு முன்­பு­தான் நீதி­மன்­றத்­தில் பிணை பெற்­றுள்­ளார்.

ஆவின் நிறு­வன மோச­டி­யில் அவ­ருக்கு பெரும் பங்கு இருப்­ப­தாக புகார்­கள் எழுந்­துள்ள நிலை­யில், ஏழு நக­ரங்­களில் உள்ள ஆவின் தணிக்கை உதவி இயக்­கு­நர்­கள் அடங்­கிய குழு அண்­மைய சோதனை நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்­ளது.