ஆளில்லா வான் வழி வாகனக் கழகம் தொடக்கம்

ஆளில்லா வான் வழி வாகனக் கழகம் தொடக்கம்

1 mins read
92c39aed-4768-497a-bc9f-0e64517e20af
-

சென்னை: பத்து கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் தமிழ்­நாடு ஆளில்லா வான்­வழி வாகனக் கழ­கம் தமி­ழக அர­சால் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கான தொடக்க விழா­வில் கலந்து கொண்டு பேசிய முதல்­வர் மு.க.ஸ்டா­லின், 'டிரோன்' எனப்­படும் ஆளில்லா வானூர்­தி­களை வடி­வ­மைப்­ப­தில் இந்த வான்­வழி வாகனக் கழ­கம் கவ­னம் செலுத்­தும் என்­றார்.

"தமி­ழ­கம் மட்­டு­மல்­லா­மல் பிற மாநி­லங்­க­ளி­லும் உள்ள அரசு துறை­கள், அரசு சார்ந்த நிறு­வனங்­கள், தனி­யார் நிறு­வ­னங்­கள் இப்­போது ஆளில்லா விமா­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­தத் தொடங்கி உள்­ளன. தமி­ழக அரசு தொடங்கி உள்ள புதிய கழ­கம் அனைத்து தரப்­பி­ன­ருக்­கும் உறு­து­ணை­யாக இருக்­கும்," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.

தமி­ழ­கத்­தின் தொழில்­நுட்ப முயற்­சி­க­ளுக்கு புதிய வான்­வழி வாகனக் கழ­கம் முன்­மா­தி­ரி­யாக அமை­வதாகவும் அவர் கூறினார்.