நிதிநிலை நிலவரம் குறித்து வெள்ளை அறிக்கை

நிதிநிலை நிலவரம் குறித்து வெள்ளை அறிக்கை

1 mins read
399e787c-b74c-4cf1-b08c-7e30dc535373
-

திருப்போரூர்: ஊராட்சி நிதிநிலை நிலவரத்தை மக்களுக்குத் தெரிவிக்கும் விதமாக வெள்ளை அறிக்கை வெளியிட்ட திருப்போரூர் ஒன்றியம் சிறுதாவூர் ஊராட்சித் தலைவர் வேதாவைப் பலரும் பாராட்டியுள்ளனர்.

கிராம சபைக் கூட்டங்களில் வெள்ளை அறிக்கையை வெளியிடுவதாக அவர் உறுதி அளித்திருந்தார். அதன்படி, நிதிநிலை தொடர்பான விரிவான விவரங்களைக் குறிப்பிட்டு, அவர் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்துள்ளார்.