சென்னை: தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்றுப்பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், மாநிலம் முழுவதும் 2,356 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆக அதிகமாக சென்னையில் 1,868 தெருக்களும் செங்கல்பட்டில் 121, தஞ்சாவூரில் 62 தெருக்களும் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி, கரூர், நாகை, ராமநாதபுரம், திருவாரூர், விழுப்புரம், விருதுநகர் உட்பட ஒன்பது மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் ஏதுகில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

