10 கி.மீ. நடைப்பயிற்சிக்குப் பிறகு குளியல் தொட்டியில் நீராடும் ஆண்டாள், ெலட்சுமி

10 கி.மீ. நடைப்பயிற்சிக்குப் பிறகு குளியல் தொட்டியில் நீராடும் ஆண்டாள், ெலட்சுமி

1 mins read
f1e246fc-5350-4f01-8bd9-8bbf711e02fa
ஆண்டாளும் லெட்சுமியும் நடைப்பயிற்சிக்கு சென்றுவிட்டு நீச்சல் குளத்தில் ஆனந்தமாக நீராடுகின்றன. தண்ணீரை அலைக்கழித்து யானைகள் போடும் உற்சாகக் குளியலை பொதுமக்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர்.படம்: ஊடகம் -

திருச்சி: திரு­வ­ரங்­கம் அருள்­மிகு அரங்­க­நாத சுவாமி திருக்­கோ­யி­லில் ஆண்­டாள், பிரேமி (எ) லெட்­சுமி ஆகிய இரு பெண் யானை­கள் பரா­ம­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்த யானை­கள் குளிப்­ப­தற்­கா­கக் கட்­டப்­பட்டு வந்த நீச்­சல் தொட்டி நேற்று திறக்­கப்­பட்ட நிலை யில், அதில் படுத்­துப் புரண்டு, தண்­ணீ­ரை தனது முதுகில் பீய்ச்சி அடித்து கும்மாளம் போட்­டன. இந்த கண்கொள்­ளாக் காட்­சியை மக்­கள் பல­ரும் கண்டு ரசித்­த­னர்.

அத்­து­டன், இவ்­விரு யானை களும் நடைப்­ப­யிற்சி சென்று வர­வும் வச­தி­கள் செய்து தந்துள்ளனர்.

திருக்­கோ­யி­லுக்­குச் சொந்­த­மான உடை­ய­வர் தோப்­பில், சுமார் 40 அடி நீளம், 40 அடி அக­லம், 10 அடி ஆழத்­து­க்கு மூன்று லட்­சம் லிட்­டர் தண்ணீர் கொள்ளும் அளவுக்கு நீச்­சல் தொட்டி அமைக்­கப்­பட்­டுள்­ளது.

தின­மும் திருக்­கோ­யி­லில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலை­வி­லுள்ள தோப்­பிற்கு வரும் இவ்விரு யானை­களும் அங்­குள்ள வட்­டப்­பா­தை­யில் நாளொன்­றுக்கு 10 கி.மீட்­டர் தூரத்­திற்கு நடைப்­பயிற்சியில் ஈடுபடுகின்றன.

இவ்விரு யானை­களும் கோயி லில் தினமும் நடக்­கும் விஸ்­வ­ரூப பூசை­யி­லும் திரு­விழா பூசை­க­ளி­லும் பங்­கேற்று மக்­க­ளுக்கு ஆசி வழங்கி வரு­கின்­றன.

இந்த யானை­க­ளுக்கு இயற்கை உண­வு­, சமைத்த உண­வு­ மருத்­து­வர்­க­ளின் ஆலோ­ச­னைப்­படி வழங்­கப்படுகிறது.

மாதம் இரு­முறை கால்­நடை மருத்­து­வர்­கள் அவற்­றின் உடல் நல­னைப் பரி­சோ­திக்கின்­ற­னர். வனத்­துறை அலு­வ­லர்­க­ளும் யானை­கள் பரா­ம­ரிப்புக்கு ஆலோ­ச­னை­க­ள் கூறி வருகின்றனர்.