இரவு நேர ஊரடங்கு ரத்து; அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் தரிசனத்துக்கு அனுமதி பிப்ரவரி 1 முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

இரவு நேர ஊரடங்கு ரத்து; அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் தரிசனத்துக்கு அனுமதி பிப்ரவரி 1 முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

2 mins read
a3c4ba83-4dea-474b-aa5b-cf4fd6144109
-

சென்னை: தமி­ழ­கத்­தில் வார நாட்­களில் அம­லில் இருந்து வந்த இரவு நேர ஊர­டங்கு நேற்று முதல் ரத்து செய்­யப்­பட்­டது. அதே­போல், ஒவ்­வொரு ஞாயி­று­தோ­றும் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வந்த முழு ஊர­டங்­கும் விலக்­கிக் கொள்­ளப்­ப­டு­வ­தாக தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது.

மாநி­லத்­தில் கொரோனா, ஓமிக்­ரான் மூன்­றா­வது அலை­யின் தாக்­கத்­தால் மக்­கள் பாதிக்­கப் படா­மல் இருக்க ஏரா­ள­மான கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டி­ருந்­தன.

இந்­நி­லை­யில், தொடர்ந்து ஐந்­தா­வது நாளாக கிரு­மிப் பர­வல் தமி­ழ­கத்­தில் சற்றே தணிந்து வரு­வ­தால் ஒரு­சில கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டுள்­ளன.

பிப்­ர­வரி ஒன்­றாம் தேதி முதல் ஒன்­றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை­யி­லான பள்­ளி­க­ளுக்­கும் கல்­லூ­ரி­க­ளுக்­கும் சுழற்சி முறை­யில் இன்றி ேநர­டி­யாக வகுப்­பு­கள் நடத்­தப்­படும் என பள்­ளிக் கல்­வித் துறை அமைச்­சர் அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி அறி­வித்­துள்­ளார்.

ஆனால், மழ­லை­யர் விளை­யாட்­டுப் பள்­ளி­கள், பாலர் பள்­ளி­கள் செயல்­பட அனு­மதி இல்லை என்­றும் குறிப்­பிட்­டுள்­ளார்.

மருத்­து­வ­ம­னை­களில் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்டு சிகிச்சை பெற்­று­வ­ரும் உள்­நோ­யா­ளி­க­ளின் எண்­ணிக்கை குறை­வாக இருப்­பதை சுகா­தா­ரத் துறை சுட்­டிக்­காட்­டி­யது.

இதை­ய­டுத்து, வேலை­வாய்ப்பு, பொரு­ளா­தா­ரம், மாணவ மாணவி யரின் எதிர்­கா­லம், மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை மீள்­வ­தற்கு ஏது­வாக சில கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­து­வ­தாக முதல்­வர் மு.க. ஸ்டா­லின் அறி­வித்­தார்.

உண­வ­கங்­கள், விடு­தி­களில் 50% வாடிக்­கை­யா­ளர்­கள் அமர்ந்து சாப்­பி­ட­வும் திரை­ய­ரங்­கு­கள் 50% பார்­வை­யா­ளர்­க­ளு­டன் செயல்­பட வும் அனு­மதி அளித்­துள்­ளார்.

இனி வார இறுதி நாட்­களில் அனைத்து வழி­பாட்­டுத் தலங்­க­ளி­லும் பக்­தர்­கள் தரி­ச­னம் செய்­ய­லாம் என்­று முதல்வர் கூறியதை அடுத்து, அனைத்து மத வழி­பாட்­டுத் தலங்­க­ளி­லும் நேற்று பக்­தர்­கள் கூட்­டம் அலை­மோ­தி­யது.

நீண்ட நாட்­கள் கழித்து வெள்­ளிக்­கி­ழ­மை­யான நேற்று கோயில்­கள் திறக்­கப்­பட்­ட­தால் வட­ப­ழனி முரு­கன் கோயி­லில் பக்தர்கள் தரி­ச­னம் செய்ய குவிந்­த­னர்.

இதற்­கி­டையே, கல்­லூ­ரி­கள் திறக்­கப்­பட்­டா­லும் இணை­யம் வழி­யி­லேயே தேர்­வு­கள் நடை­பெ­றும் என உயர்­கல்­வித் துறை அமைச்­சர் பொன்­முடி தெரி­வித்­துள்­ளார்.

விழுப்­பு­ரத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த அமைச்­சர் பொன்­முடி, "கல்­லூ­ரி­கள் பிப்­ர­வரி 1 முதல் திறக்­கப்­பட்­டா­லும் ஏற்­கெ­னவே அறி­விக்­கப்­பட்­டது போல் தேர்­வு­கள் இணை­யம் மூல­மாக நடை­பெ­றும். இந்த தேர்­வு­கள் முடிந்­த­பி­றகு மாண­வர்­கள் கல்­லூ­ரிக்கு வருகை புரிய வேண்­டும். செய்­முறைத் தேர்வு நேர­டி­யா­கவே நடை­பெ­றும்," என்­றார்.

திரு­ம­ண நிகழ்­வு­க­ளில் அதி­க­பட்­ச­மாக 100 பேரும் இறப்பு நிகழ்­வு­க­ளுக்கு அதி­க­பட்­ச­மாக 50 பேருக்கு மட்­டுமே அனு­மதி. சமு­தாய, கலா­சார, அர­சி­யல் கூட்­டங்­கள் போன்ற நிகழ்­வு­க­ளுக்குத் தடை தொட­ர்­கிறது.