'பிரசாரத்தில் சிறுவர்களைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை'

'பிரசாரத்தில் சிறுவர்களைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை'

1 mins read
912e0916-8c6a-4ff3-adb3-ddf2a87f46ac
-

திருச்சி: தேர்தல் பிரசாரத்தின் போது தங்களது கட்சிகளுக்கு ஆதரவாகச் சிறுவர்கள், பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தி வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு எச்சரித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மூன்று கட்டங்களாகப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

"இத்தேர்தலுக்காக திருச்சி மாவட்டத்தில் 1,262 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அவற்றில் 157 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப் பட்டுள்ளன. ஏழு இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இரவு 8 முதல் காலை 8 மணி வரை பிரசாரம் செய்யக்கூடாது," என்று ஆட்சியர் சிவராசு கூறினார்.