சத்துணவுக் கூடத்தில் குட்டி யானையின் எலும்புக்கூடு

சத்துணவுக் கூடத்தில் குட்டி யானையின் எலும்புக்கூடு

1 mins read
69a6e4c9-b286-4655-982c-b926b66434d5
-

கோவை: கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வால்பாறை அரு கில் உள்ள 'ஹைபாரஸ்ட் எஸ்டேட்' பகுதியில் பயன்பாட்டில் இல்லாத சத்துணவுக் கூடத்தை நகராட்சி அதிகாரிகள் திறந்துள்ளனர்.

அப்போது, சத்துணவுக் கூடத் தில் குட்டி யானையின் எலும்புக்கூடு கிடந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ந்தனர். பல ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் இந்த சத்துணவுக் கூடத்திற்குள் குட்டியானை ஒன்று அங்கிருந்த ஓட்டை வழியாக உள்ளே புகுந்து பின்னர் வெளியேற முடியாமல் இறந்திருக்கலாம் என வனத்துறையினர் நம்புகின்றனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.