திருப்பூர்: மூன்று கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும் திருப்பூர் மாநகரில் இன்னும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது.
எனவே 4வது குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் காலையில் தண்ணீரைத் திறந்து விட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக ஏழு நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்பட்டு வந்த குடிநீர், தற்போது 10 நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதையடுத்து, திருப்பூர் பல்லடம் சாலையில் காலிகுடங்களுடன் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.

