தாலிக்குத் தங்கம்: அலைக்கழிப்பதாக புகார்

தாலிக்குத் தங்கம்: அலைக்கழிப்பதாக புகார்

1 mins read
51c2edd0-b54c-4987-b7ff-98390dd0bcd4
-

ஆண்­டி­ப்பட்டி: ஆண்­டிப்­பட்டி பகுதி­யில் தாலிக்குத் தங்­கம் வழங்­கும் திட்­டத்­தின் கீழ், தங்களிடம் தங்­கத்தை வழங்­கா­மல் அலைக்­கழித்து வரு­வ­தாக பயனாளிகள் குற்றம்சாட்டி உள்ளனர். ஆண்­டிப்­பட்டி பகு­தி­யில் கடந்த 27ஆம் தேதி அன்று நடை­பெற இருந்த தாலிக்குத் தங்­கம் வழங்­கும் விழா­வுக்கு 30 பய­னா­ளி­களை வரும்­படி சமூக நலத்­துறை அதி­கா­ரி­கள் அழைத்­தி­ருந்­த­னர். ஆனால், விழா மண்­ட­பம் பூட்­டப்­பட்­டி­ருந்­த­தால் பய­னா­ளி­கள் ஆத்­தி­ர­ம­டைந்­த­னர். "சமூக நலத்­துறை அதி­கா­ரி­கள் முறை­யாகத் தெரி­விக்­கா­மல் எங்­களை அலையவிடு­கி­றார்­கள். இது­குறித்து மாவட்ட நிர்­வா­கத்தினர் நட­வ­டிக்கை எடுக்கவேண்­டும்," என பய­னா­ளி­கள் கூறினர்.