விசிக, தேமுதிக, மநீம, அதிமுக, பாஜக கட்சிகள் ஆேலாசனை சூடுபிடிக்கும் தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேர்தல் ஆணையம்: விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னம் தரமுடியாது

விசிக, தேமுதிக, மநீம, அதிமுக, பாஜக கட்சிகள் ஆேலாசனை சூடுபிடிக்கும் தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேர்தல் ஆணையம்: விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னம் தரமுடியாது

2 mins read
ba42bbce-a828-49f4-baf4-512cdf9faea7
-

சென்னை: தமி­ழ­கத்­தில் நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­தல் களம் சூடு­பி­டிக்­கத் தொடங்­கி­யுள்­ளது. வேட்­பா­ளர்­களை இறுதி செய்­யும் பணி­யில் அனைத்­துக் கட்­சி­களும் மும்முர­மாக ஈடு­பட்டு வரு­கின்­றன.

திமுக, அதி­முக, பாமக, தேமு­திக, மநீம, நாம் தமி­ழர் கட்சி, அம­முக உள்­ளிட்ட கட்­சி­கள் தேர்தல் பணிகள், கூட்டணிப் பங்கீடு, வெற்றி வியூகம் குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்­நி­லை­யில், திமுக கூட்­ட­ணி­யில் உள்ள விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சி, வார்டு பங்­கீடு தொடர்­பான பேச்­சு­வார்த்­தையை நேற்று தொடங்­கி­யது.

திமுக தலை­வ­ரும் முதல்­வ­ரு­மான மு.க.ஸ்டா­லினிடம் விடு­தலை சிறுத்­தை­கள் கட்­சி­யின் தலை­வர் திரு­மா­வ­ள­வன், இரண்டு மேயர், 10 நக­ராட்­சித் தலை­வர் இடங்­களை கோரி­யுள்­ள­தா­கத் தெரி­கிறது.

இதுகுறித்து செய்தியாளர்­க­ளி­டம் திரு­மா­வ­ள­வன் பேசியபோது, "பேரூ­ராட்சி, நக­ராட்சி, மாந­க­ராட்­சி­களில் தலை­வர், துணைத் ­தலை­வர் பத­வி­களை நிய­மிக்­கும்­போது விசி­க­விற்­கும் போதிய இடங்­களையும் நல்ல வாய்ப்­பு­களையும் வழங்கவேண்­டும் என வேண்­டு­கோள் விடுத்­துள்­ளோம்," என்றார்.

இதற்­கி­டையே, வரும் திங்­க­ளன்று தனது முதல்­கட்ட வேட்­பா­ளர் பட்­டி­யலை வெளி­யிட உள்­ள­தாக தேமு­திக அறி­வித்துள்­ளது.

அத்துடன், தேர்­த­லில் போட்­டி­யிட விரும்புபவர்­க­ளு­டன் ஆலோ­ச­னை­யை­யும் அது நடத்தி வரு­கிறது.

கோவை­யில் மத்­திய இணை அமைச்­சர் எல் முரு­கன் தலை­மை­யில் பாஜ­க­வி­னர் ஆலோசித்தனர்.

அதிமுக-பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், நெல்லை, நாகர்கோவில் ஆகிய நான்கு மாநகராட்சிகளையும் பாஜகவுக்கு ஒதுக்கும்படி அக்கட்சி வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மநீம சார்­பில் நான்காவது கட்ட 143 பேர் கொண்ட வேட்­பா­ளர்­கள் பட்­டி­யலை அதன் தலை­வர் கமல்­ஹா­சன் டுவிட்­ட­ரில் வெளி­யிட்­டுள்­ளார். "மாற்­றத்­திற்கு வாக்­க­ளி­யுங்­கள்," எனவும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் கட்சியும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இந்தக் கட்சிக்கு ஆட்டோ சின்னம் வழங்கமுடியாது என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பொதுவான சின்னமாக ஆட்டோ சின்னம் வழங்கக்கோரி விஜய் மக்கள் இயக்கம் தேர்தல் ஆணையத்திடம் கோரியிருந்த நிலையில், அதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே பொதுச் சின்னம் ஒதுக்கீடு செய்யமுடியும் என்றும் பதிவு செய்யப்படாத நிலையில் தனியாக சின்னம் ஒதுக்க முடியாது என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

இத்தேர்தலின்போது விஜய்யின் படங்களையும் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியையும் வேட்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என இக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.